fbpx

போட்டியில் இருந்து சசிதரூர் விலக வலியுறுத்தல் ? ….

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுமாறு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல்காந்தியிடம் வலியுறுத்தியதாக சசிதரூர் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படுகின்றது. வரும் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் இடையே நேரடி போட்டிஉள்ளது.

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கட்சியின் மேலிட தலைவர்கள் பலர் ஆதரவு உள்ளது. வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போதே இதை யூகிக்கும் வகையில் நிகழ்வுகள் அரங்கேறின. ஆனால் மறுபக்கம் கட்சியின் மூத்த தலைவர்கள் யாருடைய ஆதரவம் பெரிய அளவில் இல்லாமல் சசி தரூர் போட்டிக் களத்தில் நிற்கின்றார். தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்கள் கூட இல்லாத நிலையில் , கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரும் பணியில் இரு தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

சசிதரூருக்கு அவரது சொந்த மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க மறுத்துள்ளது. கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.சுதாகரன் வெளிப்படையாக கேரள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மட்டுமே ஆதரவு தரும் என அறிவித்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது. இதனால் பல தலைவர்கள் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள வலியுறுத்தினர்.

ஆனால்இதை , ராகுல்காந்தி மறுத்துவிட்டார் என கூறப்படுகின்றது. கட்சிக்கு நல்லதே நடக்கும் என சசிதரூர் தெரிவித்துள்ளார். மேலும் சசி தரூர் கூறுகையில் கட்சியில் பெரிய தலைவர்கள் ஆதரவு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Next Post

வேதனையான நாட்கள்... முத்தக்காட்சி பற்றி ராஷ்மிகா உருக்கம்..

Tue Oct 4 , 2022
அந்த நாட்கள் வேதனையானவை என்று விஜய் தேவரகொண்டா படத்தில் நடித்த நாட்களை குறிப்பிட்டு ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார். விஜய் தேவர்கொண்டா – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் டியர் காம்ரேட். தெலுங்கு படமான இது தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை என்றாலும் விமர்சனம் ரீதியாக பாராட்டுக்களை அள்ளியது. இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டா – ராஷ்மிகாவின் முத்தக்காட்சி பேசும் பொருளானது. இணையத்தில் […]

You May Like