fbpx

’வீட்டு பிரச்சனைக்கு சென்ற பெண்ணை வீட்டுக்காரியாக்கிய இன்ஸ்பெக்டர்’..! பாலியல் தொல்லையால் தற்கொலை முயற்சி..!

காவல்நிலையத்தில் புகாரளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விளாத்திக்குளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி கோமதி கடந்த 2019ஆம் ஆண்டு மலையாண்டிபுரத்தில் உள்ள தங்களுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். அதற்கான பணியை அலங்காநல்லூரைச் சேர்ந்த முருகன் என்ற பொறியாளரிடம் மொத்தமாக ஒப்படைத்துள்ளார். ஆனால், முருகன் அளவுக்கதிகமான பணத்தைப் பெற்றுக் கொண்டு குறித்த நேரத்தில் கட்டுமான பணிகளை முடிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின், மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கோமதி புகார் ஒன்றை அளித்தார்.

’வீட்டு பிரச்சனைக்கு சென்ற பெண்ணை வீட்டுக்காரியாக்கிய இன்ஸ்பெக்டர்’..! பாலியல் தொல்லையால் தற்கொலை முயற்சி..!

அப்போது அங்கு காவல் ஆய்வாளராக ஆனந்த தாண்டவம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அவர் முருகன் மற்றும் கோமதியை வரவழைத்து புகார் மனு குறித்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது ஆனந்த தாண்டவத்திற்கும், கோமதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வீடு கட்டுவதற்காக வைத்துள்ள பணத்தினை தன்னிடம் தருமாறு ஆனந்த தாண்டவம் கேட்டுள்ளார். வீட்டைக் கட்டித் தருவார் என்ற நம்பிக்கையில் கோமதி மொத்தமாக ரூ.5.50 லட்சம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும், கோமதியுடையாக பழக்கத்தால் அவரது வீட்டுக்கு சென்ற ஆனந்த தாண்டவம், அங்கு கோமதிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், யாருக்கும் தெரியாமல் அருகிலுள்ள கோவிலில் வைத்து தாலி கட்டியதாகவும் கூறப்படுகிறது.

’வீட்டு பிரச்சனைக்கு சென்ற பெண்ணை வீட்டுக்காரியாக்கிய இன்ஸ்பெக்டர்’..! பாலியல் தொல்லையால் தற்கொலை முயற்சி..!

பணத்தையும் கொடுக்காமல், பாலியல் தொல்லையும் கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளான கோமதி, இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து முதல்வரின் தனிப்பிரிவு, மனித உரிமை ஆணைய தலைவர், தென்மண்டல காவல்துறை தலைவர், மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையர் என அனைவரிடமும் அஞ்சல் வழியாக புகார் அளித்தார். கோமதி புகார் குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில், தற்போது விளாத்திக்குளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஆனந்த தாண்டவத்தை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

ஒரே நாளில் ரூ.304 உயர்ந்த தங்கம் விலை.. கடும் அதிர்ச்சியில் பெண்கள்..

Fri Jul 29 , 2022
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென […]
#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

You May Like