fbpx

விபரீதத்தில் முடிந்த இன்ஸ்டா நட்பு..!! லாட்ஜில் வைத்து இளம்பெண் கூட்டு பலாத்காரம்..!! சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையைச் சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிகள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே சுமுகமாக பிரிந்தனர். இருவரிடமும் தலா ஒரு குழந்தை வளர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ஜெயக்குமார் என்ற நபருடன் பழகி வந்துள்ளார் அந்த பெண்.

முதலில் நண்பராக பழகி வந்தவர், பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார். கடந்த 6ஆம் தேதி காலை 9 மணிக்கு ஜெயக்குமாரை சந்திக்க ரெட்டேரி சந்திப்புக்கு அந்த பெண் சென்றுள்ளார். அங்கு ஜெயக்குமார், மாதுளை பழச்சாறு வாங்கிக் கொடுத்து அருகில் உள்ள லாட்ஜில் இருக்கும் தனது நண்பரை பார்த்துவிட்டு வரலாம் என அழைத்துச் சென்றிருக்கிறார்.

அப்போது ஜெயக்குமாரின் நண்பர் அங்கு இருந்துள்ளார். சிறிது நேரத்தில் அந்தப் பெண் மயங்கியுள்ளார். மாலை 4.30 மணிக்கு ஜெயக்குமார் அப்பெண்ணை எழுப்பி இருசக்கர வாகனத்தில் மீண்டும் அழைத்து ரெட்டேரி சந்திப்பில் இறக்கிவிட்டு அங்கிருந்து மணலி செல்லும் ஆட்டோவில் அனுப்பி வைத்திருக்கிறார். வீடு திரும்பியபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையும் மாயமாகியுள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பெண் ராஜமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் அப்பெண்ணிடம் விசாரித்தபோது, ”என்னை ஜெயக்குமார் எழுப்பியபோது, தான் அரை மயக்கத்தில் இருந்ததாகவும், ஆடைகள் அனைத்தும் கலைந்து இருந்ததாகவும், பிறகு ஜெயக்குமார் என்னை இருசக்கர வாகனத்தில் அவசர அவசரமாக ஏற்றிச்சென்று ஆட்டோவில் ஏற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

எனவே, ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனரா? என்ற கோணத்திலும், மணலி பெண்ணிடம் இன்ஸ்டாகிராமில் ஜெயக்குமார் என்ற பெயரில் பழகியவரின் பெயர் உண்மையிலேயே ஜெயக்குமார்தானா? எந்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Read More : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!! ஆயுத பூஜை வாழ்த்து தெரிவித்தார் தவெக தலைவர் விஜய்..!!

English Summary

When Jayakumar woke me up, the woman complained that she was half unconscious and all her clothes were scattered.

Chella

Next Post

உபி இடைத்தேர்தலில் OBC ஃபார்முலாவை பயன்படுத்தும் பாஜக? வெளிவந்த ஆதாரங்கள்..

Fri Oct 11 , 2024
BJP likely to implement OBC formula in UP bypolls after Haryana win

You May Like