fbpx

வீட்டிற்கு வந்த இன்ஸ்டா நட்பு..!! விருந்து வைத்த பிளஸ்1 மாணவி..!! தாய் கண்முன்னே நடந்த சம்பவம்..!!

மதுரவாயலில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவரை மிரட்டி பணம் பறித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை மதுரவாயல் சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி, அமைந்தகரையில் உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா சமயத்தில் ஆன்லைன் வகுப்பிற்காக ஸ்மார்ட் போன் ஒன்றை இவரது பெற்றோர் வாங்கித் தந்துள்ளனர். அந்த போனில் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை மாணவி பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஆண்டு பூந்தமல்லியை அடுத்த குத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் (19) என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

வீட்டிற்கு வந்த இன்ஸ்டா நட்பு..!! விருந்து வைத்த பிளஸ்1 மாணவி..!! தாய் கண்முன்னே நடந்த சம்பவம்..!!

இது நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதையடுத்து இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். மாணவி தனியாக வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ஜார்ஜ், காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர், அதை வெளியே சொல்லி விடுவேன் என்று மிரட்டி பலமுறை அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளான். இதுபோல, மாணவியை மிரட்டி அடிக்கடி பணம் வாங்கி, உல்லாசமாக செலவு செய்து வந்துள்ளான் ஜார்ஜ். இதுகுறித்து, அந்த மாணவியின் தாயாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார் ஜார்ஜ் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், ஜார்ஜ் அந்த மாணவியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறியும், மிரட்டியும் பலமுறை பலாத்காரம் செய்ததுடன் பணம் பறித்ததும் தெரியவந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக மாணவியிடம் ரூ. 15 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளான் அப்போதுதான் அந்த மாணவி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

வீட்டிற்கு வந்த இன்ஸ்டா நட்பு..!! விருந்து வைத்த பிளஸ்1 மாணவி..!! தாய் கண்முன்னே நடந்த சம்பவம்..!!

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவியின் வீட்டுக்கு வந்த ஜார்ஜ், அந்த மாணவியின் தாயார் கண் முன்னே மாணவியிடம் தகாத முறையில் நடந்துள்ளான். இதில், ஆத்திரமடைந்த தாயார் கல்லூரி மாணவனை தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து அவரையும் மிரட்டி விட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, ஜார்ஜ் மீது போக்சோ சட்டம் மற்றும் மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளில் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர், ஜார்ஜை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூழல் சிறையில் அடைத்தனர். மேலும், இதுபோல ஜார்ஜ் வேறு பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து பணம் பறித்துள்ளானா? என்பது குறித்தும் மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

சிறுமியை போதையாக்கி தைல மர தோப்பில் 5 பேர் கூட்டு பலாத்காரம்..!! வீடியோ லீக்கானதால் பரபரப்பு..!!

Wed Nov 16 , 2022
சிறுமிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து, தைலமர காட்டுக்குள் 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியை, ரங்கநாதன் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது பைக்கில் அமர வைத்து காவிரி கரையோரத்தில் உள்ள தைலமர காட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளான். பின்னர் அங்கு சிறுமிக்கு, குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, தனது நண்பர்களான […]

You May Like