மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் தளம் இன்று காலை திடீரென முடங்கியதால் பயனர்கள் அதிருப்தி அடைந்தனர்..
உலகம் முழுவதும் பெரும்பாலான பயனர்கள் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.. இந்தியாவில் திரைப்பிரபலங்கள் தொடங்கி சாதாரண பொதுமக்கள் வரை பல்வேறு தரப்பினரும் இன்ஸ்டாகிரா தளத்தை பயன்படுத்தி தங்களின் அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர்.. இந்நிலையில் இன்று காலை திடீரென இன்ஸ்டாகிராம் தளம் முடங்கியதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. சுமார் 27,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை அணுகுவதில் சிக்கலை எதிர்கொண்டனர். அதன்படி இங்கிலாந்தில் இருந்து சுமார் 2,000 பயனர்கள் இன்ஸ்டாகிராம் முடங்கியதாக புகார் அளித்துள்ளனர்.. இதே போல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து தலா 1,000 பேர் புகாரளித்துள்ளனர்..
அதிகபட்சமாக அமெரிக்காவில் 46,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் இன்ஸ்டாகிராம் முடக்கம் குறித்து ஆன்லைனில் புகார் தெரிவித்து வருகின்றனர்.. இந்த புகார்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் சர்வர் இணைப்பு தொடர்பானது என்றூம், 20 சதவீதம் மட்டுமே உள்நுழைவு சிக்கல்களை தொடர்பானது என்றும் கூறப்படுகிறது.. எனினும் இந்த முடக்கத்திற்கான காரணம் குறித்து இன்ஸ்டாகிராம் எந்த விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை.. இதனிடையே இன்ஸ்டாகிராம் முடக்கம் குறித்து ட்விட்டரில் பல்வேறு மீம்ஸ்களையும் பதிவிட்டு பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றார்..