மெட்டாவுக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலி இன்று செயலிழந்ததாக பல பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பல பயனர்களும் இணையத்தில் புகாரளித்துள்ளனர்.. இதனைத்தொடர்ந்து, பல இணைய பயனர்கள் இன்ஸ்டாகிராமிற்கு என்ன ஆனது என்றும் அது ஏன் சரியாகச் செயல்படவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பல்வேறு ஆன்லைன் சேவைகள், இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகளின் நிலையைப் பற்றிய நிகழ்நேர தகவலை வழங்கும் இணையதளமான டவுன் டிடக்டர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அந்த பதிவில் “பல பயனர்கள் இன்ஸ்டாகிராமில் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தது.
இன்ஸ்டாகிராம் என்பது ஒரு சமூக ஊடக செயலியாகும். பயனர்கள் தங்கள் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றவும், அதில் அவர்களுக்கு பில்டர்ஸ் பயன்படுத்தவும் மற்றும் அந்த படங்களை Twitter மற்றும் Facebook போன்ற சமூக வலைத்தளம் உட்பட பல வழிகளில் பகிரவும் உதவுகிறது. ஐபோன், ஐபாட் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான பயன்பாடாக இன்ஸ்டாகிராம் கிடைக்கிறது. இன்ஸ்டாகிராம் என்பது பேஸ்புக்கின் ஒரு பகுதியாகும்.