மகளிர், குழந்தைகள் பாதுகாப்பு கருதி, டாக்சி, கேப் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் EMERGENCY BUTTON-ஐ பொருத்த. வேண்டும். டிசம்பர் 1ஆம் தேதி முதல் அவசர கால பட்டன் பொருத்துவது கட்டாயம் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 23 அரசு வெளியிட்டுள்ள கடிதத்தில், புதிய விதிகள் டிசம்பர் 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும், மேலும் கார் உரிமையாளர்கள் நவம்பர் 30, 2024 வரை EMERGENCY BUTTON-ஐ கொண்ட கண்காணிப்பு சாதனங்களை நிறுவ வேண்டும். அறிக்கைகளின்படி, கார் உரிமையாளர்கள் சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ.7,599 (ஜிஎஸ்டி தவிர) இந்த சாதனங்களை வாங்கலாம். இந்த சாதனங்களை மாநிலத்திற்கு வழங்குவதற்காக 13 உற்பத்தியாளர்கள் ஏஜென்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது.