fbpx

இனி மாவே அரைக்காமல், பஞ்சுபோல் இட்லி செய்யலாம்.. எப்படி தெரியுமா?

தென் இந்தியர்களை பொறுத்த வரை, பெரும்பாலும் நமது வீடுகளில் காலை மற்றும் இரவு உணவாக இட்லி அல்லது தோசையாகத் தான் இருக்கும். 5 நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்கும் இட்லிக்கு, பல மணி நேரம்னாம் மாவு அரைக்க வேண்டும். இதனால் பலர் கடையில் மாவு வாங்கி விடுவது உண்டு. ஆனால் இன்று விற்கப்படும் பல மாவுகளில், மாவு சீக்கிரம் புளிக்கவும், சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்கவும் பல கெமிக்கலை பயன்படுத்துகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். ஆனால் இனி மணி கணக்கில் நின்று இட்லி தோசை மாவு அரைக்க அவசியமே இல்லை. சுலபமாக இண்ஸ்டண்ட் இட்லி தோசை மாவு எப்படி அரைப்பது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

இதற்க்கு முதலில் 4 டம்ளர் இட்லி அரிசி எடுத்துக் கொள்ளவும். இதை நன்கு கழுவி வெயிலில் காயவைத்து விடுங்கள். அதே டம்ளரில் ஒரு டம்ளர் உளுந்து எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது இதனுடன் 1 ஸ்பூன் வெந்தையம் சேர்த்து நன்கு கழுவி எடுத்துக்கொள்ளுங்கள். பின் காயவைத்த அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக ரவை பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதனைத்தொடர்ந்து, நன்கு காய்ந்த உளுந்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது ஒரு தட்டில், அரைத்த அரிசி மற்றும் உளுந்து மாவை கொட்டி ஒன்றாக கலந்துக்கொள்ளவும்.

அடுத்து அரைத்து கலந்து வைத்திருக்கும் இந்த மாவை, காற்று புகாத ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக்கொள்ளலாம். நீங்கள் இட்லி சுடுவதற்கு முந்தைய நாள் இரவே ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை சேர்த்து, அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக்கொள்ளவும். பின் கரைத்த மாவை மூடி போட்டு இரவு முழுவதும் புளிக்க வைக்கவும். பின் மறுநாள் காலையில் அந்த மாவை வைத்து இட்லி பாத்திரத்தில் வழக்கம்போல் இட்லி சுட்டு எடுத்தால் போதும். சுவையான அதே சமையம் சுலபமான இட்லி தயார். இதை ஒரு முறை செய்து பாருங்கள், கட்டாயம் உங்களுக்கும் பிடிக்கும்.

Read more: உங்க வீட்டு பெண் பிள்ளைகளுக்கு பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்சனை இருக்கா? அப்போ உடனே இதை செய்யுங்க..

English Summary

instant-idly-mix-receipe

Next Post

அதிர்ச்சி!. அதிகமா டிவி பார்க்கிறீர்களா?. ஆயுட்காலம் குறையுமாம்!. பெண்களுக்கே அதிக பாதிப்பு!. மருத்துவர்கள் எச்சரிக்கை!.

Sun Dec 8 , 2024
Television: தினமும் ஒருமணி நேரம் டிவி பார்த்தால் மனிதர்களின் ஆயுட்காலம் 22 நிமிடங்கள் குறைவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நமது ஒட்டுமொத்த வாழ்விலும் நிரம்பி வழிவது தொலைக்காட்சிகளின் பிம்பங்கள்தான். செய்திகள், பொழுதுபோக்கு, திரைப்படங்கள், கல்வி, இசை, விளையாட்டு என எல்லாமும் தொலைக்காட்சிகளின் வழியேதான் நம்மை அடைகின்றன. 90 களின் இறுதியில்தான் தமிழகத்தின் கிராமங்களையெல்லாம் தொலைக்காட்சிகள் தொட ஆரம்பித்தன. அந்த காலகட்டத்தில் தூர்தர்சன் அலைவரிசை மட்டும்தான், அதற்கும் ஆண்ட்டனாவை அங்குமிங்குமாக திருப்பியபடியே […]

You May Like