கொரோனா, நிபா, டெங்கு, பன்றி போன்ற காய்ச்சலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எங்கு பார்த்தாலும் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இருப்பினும், ஒவ்வொரு பருவத்திற்கும் நோய்தொற்றுகள் மக்களை துன்புறுத்திவருகின்றன. இதனை எப்படி சமாளிப்பது, என்னென்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி நம் மனதில் இருக்கலாம்? எந்த ஒரு விஷயத்திற்கும் “வருமுன் காப்போம்” என்ற பழமொழியை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இது நோய்க்கும் பொருந்தும். நோயிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பது அவசியம்.
இதனை சமாளிப்பதற்கு நம்மிடம் சரியான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் இருப்பது உதவக்கூடும். னவே உங்களது ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி டெங்கு மற்றும் நிபா போன்ற நோய்களுக்கு காப்பீடு வழங்குமா என்பது குறித்த விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். இது போன்ற நோய்கள் பரவி வரும் இந்த சமயத்தில் ஒரு காம்ப்ரிஹென்சிவ் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் வைத்திருப்பது அவசியமானது. மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் குறைந்தபட்சம் 25 லட்சம் அல்லது அதற்கும் அதிகமான இன்சூர் செய்யப்பட்ட தொகையிலான காம்ப்ரிஹென்சிவ் ஹெல்த் கேர் திட்டத்தை வாங்குவது அவசியம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படாவிட்டால் என்ன செய்வது என்று நீங்கள் யோசிக்கலாம். இதுபோன்று சூழ்நிலையிலும் OPD சிகிச்சைக்கு காப்பீடு வழங்கக்கூடிய காம்ப்ரிஹென்சிவ் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் இன்னும் உங்களுக்கு அவசியமானதாக கருதப்படுகிறது. எத்தனை முறை மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனைகள் அல்ட்ரா சவுண்ட் அல்லது பிற நோய் கண்டறிதல் சோதனைகளை செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாது. எனவே இதுபோன்று சூழ்நிலையில் OPD காப்பீடு கொண்ட காம்ப்ரிஹென்சிவ் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
வயது, வாழ்க்கை முறை தேர்வுகளான புகைபிடித்தல், ஆரோக்கியமற்ற உணவு உண்ணும் பழக்கங்கள், மற்றும் போதுமான உடல் செயல்பாடு இல்லாமை போன்றவற்றை பொருட்படுத்தாமல் இதயம் சார்ந்த நோய்கள், டயாபட்டீஸ் மற்றும் நாள்பட்ட நுரையீரல் பிரச்சனைகள் ஏற்படலாம். முதல் நாளிலிருந்து டயாபட்டீஸ் மற்றும் ஹைப்பர் டென்ஷனுக்கு காப்பீடு வழங்கக்கூடிய திட்டங்களும் உள்ளன. மேலும் டெங்கு மற்றும் நிபா போன்ற நோய்களுடன் தொடர்புடைய சிக்கல் நிலைமையை இன்னும் மோசமாகலாம். எனவே குறைவான காத்திருப்பு காலம் அல்லது முதல் நாளில் இருந்தே காப்பீடு வழங்கக்கூடிய திட்டத்தை தேர்ந்தெடுப்பது அவசியம்.
இது போன்ற நோய்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையே பாதிக்கலாம் அல்லது ஒன்றன்பின் ஒருவராக நோய்க்கு ஆளாகலாம். எனவே ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க வேண்டுமா அல்லது இன்டிவிஜுவல் பாலிசி எடுக்க வேண்டுமா என்ற முடிவை நீங்கள் எடுக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஒவ்வொருவருக்கும் போதுமான கவரேஜ் கிடைக்கிறதா என்பதை கவனிக்க வேண்டியது அவசியம்.