fbpx

தீவிரமடையும் காய்ச்சல் பாதிப்பு..!! உடனே இதை பண்ணுங்க..!! இல்லைனா உயிருக்கே ஆபத்து..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழைக்காலம் வந்துவிட்டாலே நோய்களும் வேகமாக பரவத்தொடங்கும். குறிப்பாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழைக்கால நோய் பரவல் அதிகமாக இருக்கும். அந்த வகையில், இந்தாண்டும் தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.

காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வைரஸ் மற்றும் கொசுக்கள் மூலம் பரவும் காய்ச்சல் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது எந்த வகையான காய்ச்சல் என்பதை கண்டறிய, தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மொத்தம் 300 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இன்ஃப்ளூயென்ஸா காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும், இன்ஃப்ளூயென்ஸா ஏ வகை காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்வலி, அதீத காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருக்கும். காய்ச்சலின் தன்மையை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொண்டை வலியுடன் காய்ச்சல் இருந்தால் அதற்கு சாதாரண முறையில் சிகிச்சை அளிக்கப்படும். அதே நேரம் குழந்தைகள், முதியவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்து வழங்கப்படுகிறது.

மாறாக அதீத காய்ச்சல், சளி, தொண்டை வலி, வாந்தி போன்றவை இருந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Chella

Next Post

மாஸ் சம்பவத்திற்கு ரெடியான கோலிவுட்…! ரசிகர்கள் வெயிட்டிங்… பொங்கல் அப்டேட்ஸ்.!

Sat Nov 18 , 2023
தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களில் மார்க் ஆண்டனி, லியோ மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கின்றன. தீபாவளிக்கு வெளியான ஜப்பான் திரைப்படம் தோல்வியடைந்து ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பொங்கலுக்கு வெளிவரும் திரைப்படங்களுக்காக தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நான்கு மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. இது தொடர்பான எதிர்பார்ப்புகள் தற்போது […]

You May Like