fbpx

தீவிரமடையும் இன்புளூயன்ஸா காய்ச்சல்..! நாளை 1000 இடங்களில் முகாம்..! அமைச்சர் பரபரப்பு தகவல்..!

கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என்று யாரும் அசால்ட்டாக இருக்க வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இன்புளூயன்ஸா காய்ச்சல் பரவி வருவதால், தமிழகம் முழுவதும் நாளை 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது. காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். பருவநிலை மாற்றங்களால் காய்ச்சல் சற்று அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை 1,166 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் அதிகரித்து வருவதால், முதல்வருடன் ஆலோசனை செய்து அரசியல் தலைவர்களின் கருத்துக்களையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அதற்கேற்ப முடிவு எடுக்கப்படும்.

தீவிரமடையும் இன்புளூயன்ஸா காய்ச்சல்..! நாளை 1000 இடங்களில் முகாம்..! அமைச்சர் பரபரப்பு தகவல்..!

கொரோனா பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்பு அமெரிக்காவில் உள்ளது. அப்படி இருந்தும் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். அங்கே 4 அலைகள் வந்த பிறகு முடிவுக்கு வந்து விட்டதாக கூறியுள்ளனர். ஆனால், கொரோனா முடிவுக்கு வந்து விட்டதாக நாம் அசால்டாக இருக்க வேண்டாம். கொரோனா பாதிப்பு என்பது வைரஸ் தொடர்ச்சியாக உருமாற்றம் அடைந்து வந்து கொண்டிருக்கிறது. ஒமைக்ரான் பல வழிகளில் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. உலகத்தில் பல நாடுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தினசரி பாதிப்பு உள்ளது.

இந்தியாவில் குறிப்பாக, கேரள மாநிலத்தில் 2,000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் 4 மாநிலங்களில் கொரோனா பரவல் கூடுதலாக உள்ளது. தமிழகத்தில் 500-க்கும் கீழேதான் உள்ளது. சென்னையிலும், கோவையிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. நாம் அச்சப்பட தேவையில்லை” என்றார்.

Chella

Next Post

விதிமீறல் கட்டிடம்..! மத்திய அமைச்சரின் பங்களாவை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Tue Sep 20 , 2022
விதிமுறை மீறி கட்டப்பட்ட மத்திய பாஜக அமைச்சரின் பங்களாவை இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மத்திய பாஜக அமைச்சர் நாராயண் ரானேயின் ‘ஆதீஷ்’ பங்களா, கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மும்பை மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த பங்களாவை ஆய்வு மேற்கொண்டது. அதில், ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டதால், நாராயண் ரானேவுக்கு எதிராக மும்பை […]
’வீட்டு வேலைகள் செய்ய விருப்பமில்லையா’..? ’திருமணத்திற்கு முன்பே சொல்லிவிடுங்கள்’..!! ஐகோர்ட்

You May Like