fbpx

நெகிழ்ச்சி!… போருக்கு செல்லும் முன் திருமணம் செய்து கொண்ட ராணுவ தம்பதி!

 நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதல்கள் தீவிரமாகி வரும் நிலையில், முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட ரிசர்விஸ்ட் எனப்படும் வீரர்களை போரில் பங்கேற்க இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த முன்னாள் ராணுவ வீரர்கள், விடுமுறை சென்றிருந்தவர்கள் என கூடுதலாக 300,000 பாதுகாப்புப் படையினருக்கு இஸ்ரேல் உத்தரவிடப்பட்டது. இப்போரில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கலந்துகொண்டுள்ளனர். ராணுவ வீராங்கனைகளாக, மருத்துவர்களாக பெண்களும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர்.

அந்தவகையில், இரண்டு வீரர்கள் தங்கள் இராணுவ படைப் பிரிவுகளுக்குச் செல்வதற்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உரி மின்ட்ஸர் மற்றும் எலினோர் யோசெஃபின் ஆகிய இருவரும் இஸ்ரேலிய இராணுவப் பாதுகாப்பு வீரர்களில் அடங்குவர். போர் உச்சக்கட்டம் அடைந்ததையடுத்து இருவரும் அவரவர் ராணுவப் படை பிரிவுக்கு திரும்பினர். இருப்பினும், பணிக்கு திரும்புவதற்கு முன் இருவரும் வீட்டிற்கு வந்து இரவோடு இரவாக திருமணம் செய்து கொண்டனர்.

திருமண விழாவில் கலந்து கொண்ட ரபி டேவிட் ஸ்டேவ், “போருக்கு செல்லும் முன் திருமணம் செய்து கொள்வது மிகவும் பெருமைக்குரிய விஷயம். தம்பதியரின் பந்தத்தின் வலிமைக்கு இந்தத் திருமணம் ஒரு சான்று. அவர்கள் போராடும் நாட்டையும் வீட்டையும் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினர். அவர்களுக்கு மனதார நன்றி தெரிவித்தார். இப்போது இவ்வளவு எளிமையான திருமணமாக இருந்தாலும், இருவரும் போர் முடிந்து பத்திரமாகத் திரும்பியதும் பிரமாண்டமாக கொண்டாடஉள்ளனனர்.” என்று கூறினார்.

Kokila

Next Post

மாமியாருடன் உறவு கொள்ளும் பழங்குடி கலாச்சாரம்!… நேரில் பார்த்து அறிவுரையும் கூறுவார்களாம்!

Fri Oct 13 , 2023
உலகளவில் உள்ள பல நாடுகளில் இன்றளவும் பழங்குடியின கலாச்சாரம் நிலவி வருகிறது. இதில் சில பழங்குடியின மக்கள் தங்களின் விநோதமான கலாச்சாரத்தால், உலக மக்களின் கவனத்தை ஈர்க்கின்றனர். இதிலும் உகாண்டாவில் வாழும் பழங்குடியினர் ஒருபடி மேலே சென்று முதலிடத்தில் இருக்கின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம், அவர்களின் மாறுபட்ட வாழ்க்கை முறை. அதைப்பற்றி இப்போது பார்க்கலாம் உகண்டாவில் வாழும் ’அங்கோல்’ என்னும் பழங்குடி இன மக்களின் முதலிரவு கலாச்சாரத்தைக் கேட்டால் […]

You May Like