fbpx

தீவிரமடையும் கொரோனா..!! பள்ளி-கல்லூரிகள், திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம்..!! முதலமைச்சர் அதிரடி உத்தரவு..!!

பள்ளி, கல்லூரி, திரையரங்கம், குளிரூட்டப்பட்ட அறைகள் உட்பட உள் அரங்குகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரிகள், கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினருடன் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். அதில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “பெங்களூரு, மங்களூரு உள்ளிட்ட‌ சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, திரையரங்கம், குளிரூட்டப்பட்ட அறைகள் உட்பட உள் அரங்குகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மெட்ரோ ரயில், பேருந்து ஆகியவற்றிலும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தீவிரமடையும் கொரோனா..!! பள்ளி-கல்லூரிகள், திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம்..!! முதலமைச்சர் அதிரடி உத்தரவு..!!

சளி, காய்ச்சல், இருமல் ஆகிய அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டை பொதுமக்கள் உரிய‌ கட்டுப்பாடுகளுடன் கொண்டாட வேண்டும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

இந்த ஃபோன் உங்கக்கிட்ட இருக்கா..? டிசம்பர் 31ஆம் தேதியே கடைசி..!! இனி வாட்ஸ் அப் இயங்காது..!!

Mon Dec 26 , 2022
டிசம்பர் 31ஆம் தேதி முதல் 49 போன்களில் வாட்ஸ் அப் செயலி வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே தற்போது வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகின்றனர். மேலும், பயனர்களுடைய வசதிக்காக வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வபோது பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பணப்பரிமாற்றும் முதலான அனைத்து […]
இந்த ஃபோன் உங்கக்கிட்ட இருக்கா..? டிசம்பர் 31ஆம் தேதியே கடைசி..!! இனி வாட்ஸ் அப் இயங்காது..!!

You May Like