fbpx

தீவிரமடையும் கொரோனா..!! மூத்த குடிமக்கள், இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய உத்தரவு..!!

கர்நாடாகவில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கர்நாடக அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கர்நாடாகவில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தினார். மேலும், கொரோனா குறித்து மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். அரசு மருத்துவமனைகளை தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். கேரளாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் பகுதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்படும். சுவாசக் கோளாறு உள்ளவர்கள் கட்டாயமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.

Chella

Next Post

டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்ட 33 எம்பி-க்கள் திடீர் சஸ்பெண்ட்..!! நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு..!!

Mon Dec 18 , 2023
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த மேலும் 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய 30 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தமிழச்சி தங்கபாண்டியன், சி.என்.அண்ணாதுரை, செல்வம் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் எம்பிக்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட 31 எம்.பி.க்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எம்பிக்களின் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் […]

You May Like