fbpx

தீவிரமடையும் பருவமழை!… 2 மணிநேரத்தில் 62,350 முறை மின்னல்!… 12 பேர் உயிரிழப்பு!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஒடிசா மாநிலம் முழுவதும் சனிக்கிழமையன்று மின்னல் தாக்கியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது 2 மணிநேரத்தில் 62,350 முறை மின்னல் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் விடாது பலத்த மழை கொட்டி வருகிறது. இந்திய வானிலை மையம், செப்டம்பர் 7-ம் தேதி வரை ஒடிசா மாநிலம் முழுவதும் தீவிரமான வானிலை இருக்கும் என்று எச்சரித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும் என்றும், அதன் தாக்கத்தால், ஒடிசா முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. “வாரத்தின் பிற்பகுதியில் மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. செப்டம்பர் 7 வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று இந்திய வானிலை மையம் மேலும் கூறியுள்ளது.

சனிக்கிழமை மின்னல் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் நான்கு பேர் குர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பலங்கிரில் 2 பேரும் அங்குல், பௌத், தேன்கனல், கஜபதி, ஜகத்சிங்பூர் மற்றும் பூரியைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவரும் மின்னலுக்கு பலியாகியுள்ளனர் என்று சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தவிர, கஜபதி மற்றும் கந்தமால் மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் எட்டு கால்நடைகளும் இறந்துள்ளன. உயிரிழந்த குடும்பங்களுக்கு ஒடிசா அரசு சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் சத்யபிரதா சாஹு கூறினார்.

Kokila

Next Post

பாஜக சொத்து மதிப்பு இத்தனை கோடியா?… ஒரே ஆண்டில் 21% உயர்வு!… தேசிய கட்சிகளின் முழுவிவரம் இதோ!

Tue Sep 5 , 2023
2021-22 நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சியின் சொத்து மதிப்பு 21.17 சதவீதம் அதிகரித்து ரூ.6,046.81 கோடியாக உள்ள என்று ஏடிஆர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது குறித்து ஏடிஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கட்சிகளின் சொத்துமதிப்புகள் 2020-21 மற்றும் 2021-22 நிதியாண்டுகளுக்கான சொத்து மதிப்பு விவரங்களை ஆய்வு செய்ததில் 8 தேசிய கட்சிகளின் சொத்து மதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதலாவதாக பாரதிய ஜனதா கட்சி அதிக சொத்து மற்றும் கையிருப்பு நிதியை […]
குஜராத், இமாச்சல் தேர்தலில் இந்த கட்சிதான் வெற்றி பெறும்..!! அடித்து சொல்லும் பிரசாந்த் கிஷோர்..!!

You May Like