fbpx

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை..!! தென்கொரியா, அமெரிக்காவை மீண்டும் சீண்டிய வடகொரியா..!!

வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தி, அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் பதிலடி கொடுத்துள்ளது.

அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா – தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. தனது எதிரி நாடுகளான தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இதற்கிடையே கொரிய தீபகற்பத்தில் தென்கொரியா – அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது. அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானமான பி1-பி விமானமும் இதில் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில், தென்கொரிய எல்லைப்பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை தென்கொரியாவின் கிழக்கு கடற்பகுதியில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Chella

Next Post

தங்கம், வைரங்களை சொந்த ஊரில் புதைத்து வைத்துள்ள சீமான்..!! ஆனால், வாடகைக்கே பணம் இல்லையாம்..!! பகீர் தகவலை கூறிய விஜயலட்சுமி..!!

Thu Aug 31 , 2023
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் பாரதிராஜா, மணிவண்ணனால் ஈர்க்கப்பட்டு சினிமாவுக்கு வந்தவர். அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு வாழ்த்துகள் எனும் படத்தில் நடித்த போது சீமானுக்கு நடிகை விஜயலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, திருமணம் செய்து கொள்வேன் என உறுதிமொழியை அளித்து விஜயலட்சுமியுடன் சீமான் பலமுறை நெருக்கமாக இருந்துள்ளார் என […]

You May Like