வங்கி கடன்களுக்கான வட்டியை 0.25 சதவீதம் உயர்த்துவதாக ஹெச்.டி.எஃப். சி வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டின் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அவ்வபோது கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன.. இதனால் கடன் வாங்கியவர்கள் ஏற்கனவே சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் கடன் வாங்கியவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி அறிவிபுப் வெளியாகி உள்ளது.. ஆம்.. நாட்டின் முக்கியமான வங்கிகளில் ஒன்றான ஹெச்.டி.எஃப்.சி வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது..
வங்கி கடன்களுக்கான வட்டியை 0.25 சதவீதம் உயர்த்துவதாக ஹெச்.டி.எஃப். சி வங்கி தெரிவித்துள்ளது.. புதிதாக பெறப்படும் கடன்களுக்கு மட்டுமின்றி, ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு இந்த வட்டி உயர்வு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த வட்டி உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது… கடந்த 2 மாதங்களில் வட்டி உயர்த்தப்படுவது இது 5-வது முறையாகும்.. அதாவது மே மாதத்தில் இருந்து இதுவரை, 1.15% வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.. இதனால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி உயர உள்ளது..