fbpx

புதிய கடன்களுக்கான வட்டி விகிதம் அதிரடி உயர்வு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இந்திய மாநிலங்கள் கடந்த வாரம் வெளியிட்ட கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் 7.41 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:- ”இந்திய மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக வாரந்தோறும் வெளியிடும் கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் கடந்த வாரம் 7.41% ஆக உள்ளது. கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் இது 4 அடிப்படைப் புள்ளிகள் அதிகமாகும். கடந்த வாரத்துக்கான ஏலம் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்றது. அதில், நாட்டின் 12 மாநிலங்கள் ரூ.22,500 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வெளியிட்டன. எனினும், அந்த மாநிலங்கள் ஏற்கனவே கடன் பத்திரங்கள் மூலம் திரட்டவிருப்பதாக அறிவித்திருந்த ரூ.23,600 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 5% குறைவாகும்.

கடந்த வார ஏலத்தில் மாநிலங்களின் கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளதற்கு, அந்தப் பத்திரங்களின் சரசாரி பருவகாலம் 14 ஆண்டுகளில் இருந்து 16 ஆண்டுகளாக அதிகரித்ததே காரணம் என்று சந்தை ஆய்வு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது. அரசு கடன் வட்டி விகிதத்தின் குறியீடான 10 ஆண்டு கால கடன் பத்திரங்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அந்த வகைக் கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 34 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்தது” என்று தெரிவித்துள்ளது.

Chella

Next Post

இரவு முழுவதும் லாக் அப்பில் அடைக்கப்பட்ட காதல் ஜோடி..!! 17 வயது சிறுமியை நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை..!!

Fri Jun 30 , 2023
காவல் நிலையத்திற்குள் சிறுமியை நிர்வாணப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்த ஆய்வாளர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டம் கோக்ராபர் என்ற பகுதியில் ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது காதலனை திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். காதலர்கள் இருவரையும் கோக்ராபர் காவல்நிலைய போலீசார் பிடித்து கைது செய்தனர். காதலர்கள் இருவரும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், […]

You May Like