வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.35% உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 5.9 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயர்வால், வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டிகளை ரிசர்வ் வங்கி உயர்த்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளது. ரெப்போ வட்டி உயர்வால், வாடிக்கையாளர்கள் பெறும் கடன்களுக்கான இஎம்ஐ அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.