எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வீட்டு கடன்களுக்கான அடிப்படை கடன் வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது. இனி எல்.ஐ.சி. ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வீட்டு கடன்களுக்கான வட்டி 8.65% முதல் தொடங்குகிறது. இதில் கடன் வாங்குபவர்களின் சிபில் ஸ்கோருக்கு தகுந்தார்போல் வீட்டு கடன் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறது. மேலும் ஊதியதாரர்கள், ப்ரொபஷனல்களுக்கு கிரெடிட் ஸ்கோர் 800 அல்லது அதற்கு மேல் இருந்தால் 8.30% வட்டி விகிதம் விதிக்கப்படும். இந்த வட்டி விகிதமானது 15 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு பொருந்தும்.

அதேபோல் கிரெடிட் ஸ்கோர் 750 – 799 வரை இருந்தால் அவர்களுக்கு 8.40% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இது 5 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு பொருந்தும். மேலும், 5 கோடிக்கு மேல் 15 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு 8.60 % வட்டி விதிக்கப்படும். அதேபோல சிபில் ஸ்கோர் 700 முதல் 749 வரை இருந்தால் 50 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு 8.70 % வட்டியும், 50 லட்சத்திற்கும் மேல் 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு 8.90% வட்டியும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் வழங்கும் கடன் வகைகள் என்னென்ன..?
*இந்தியாவில் வசிப்பவர்களுக்கு வீட்டுக்கடன்.
*என்ஆர்ஐ வீட்டு கடன்.
*பிளாக் கடன்.
*வீடு மேம்பாட்டு கடன்.
*வீடு புதுப்பித்தல் கடன்.
*டாப் அப் கடன்.
*Balance transfer வேறு வங்கியில் இருந்து எல்.ஐ.சி ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்திற்கு வீட்டு கடனை மாற்றிக் கொள்ளலாம். இதுவே Balance transfer ஆகும்.