fbpx

அம்பானி இல்ல திருமணம் | ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்த ஆடையின் சுவாரஸ்ய பின்னணி இதோ..!!

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு குஜராத்தின் ஜாம்கரில் மார்ச் 1 முதல் 3 வரை உலகளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை மறக்க முடியாததாக மாற்றினர்.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாக்கள் பல மாதங்களாக நடந்து வந்தது. இந்த தொடர் மார்ச் முதல் வாரத்தில் குஜராத்தின் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய விழாவுடன் தொடங்கியது ஜாம்நகரில் நடைபெற்ற திருமணத்திற்கு முந்தைய விழாவில் இந்தியா மற்றும் உலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் மும்பையில் தொடங்கின. திருமணத்திற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. குஜராத்தி திருமணங்களின் முக்கிய நிகழ்வான தாய் மாமன் சீர் நிகழ்ச்சி (மாமேரு சடங்கு) முகேஷ் அம்பானியின் இல்லமான ஆன்டிலியா கோலாகலமாக தொடங்கியது. மாமேரு சடங்கு என்பது மணமகளை அவரது தாய் மாமன் சீர்வரிசையுடன் சந்திக்கும் நிகழ்வாகும். இனிப்பு, புடவை, நகைகள் வெள்ளை நிற வளையல்கள் மற்றும் உலர் பழங்களுடன் மணமகளின் தாய் மாமா அவரை சந்தித்தார்.

ராதிகா மெர்சண்ட் ஆடையின் ரகசியம்

இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியது. அதில் முகேஷ் அம்பானியின் புதிய மருமகள் ராதிகா அணிந்திருந்த ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிகழ்விற்காக ராதிகா லெஹங்கா (Lehenga) ஆடையை அணிந்துள்ளார். அதில் துர்கா வசனம் எழுதப்பட்டு பனாரசி துணியால் வடிவமைக்கப்பட்டிருந்தது.

மாமேரு விழாவிற்காக ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த ஆடையை (Lehenga) ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்தார். மிக நுணுக்கத்துடன் தயாரிக்கப்பட்டு, பந்தனி லெஹங்கா (Bandhani Lehenga) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தேர்ந்தெடுக்கப்பட்ட துணி வடிவமைப்பு பந்தனி வடிவத்தைக் கொண்டுள்ளது. குறித்த ஆடையானது தங்க கம்பியைப் பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

English Summary

Radhika is wearing a lehenga. It had the Durga verse written on it and was made of Banarasi fabric.

Next Post

அரசு ஊழியர்களுக்கு செக்!! 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிகிறீர்களா? - அரசு எடுத்த அதிரடி முடிவு!!

Thu Jul 4 , 2024
Department of School Education is conducting a survey for transfer of ministry employees who have been working in the same place for more than 3 years in schools and offices.

You May Like