fbpx

தென்காசி காசி விஷ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை..!! – மதுரை அமர்வு உத்தரவு

தென்காசி காசி விஷ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்காசியில் பழமையும் பெருமையும் வாய்ந்த 15ம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோயிலான காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடைபெற இருந்தது. கும்பாபிஷேக நிதி முறையாக பயன்படுத்தவில்லை என குற்றாசாட்டி தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “கோயில் கட்டுமானம் மற்றும் கும்பாபிஷேத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாகச் செலவிடப்படவில்லை. அரசின் நிதியில் மோசடி செய்யப்பட்டதுடன், கோயிலின் உறுதித்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பாக பக்தர்கள் அளித்த புகார்கள் விசாரிக்கப்பட்டபோது கோயில் பணிகளை முழுமையாக முடிக்காமல் அரசின் நிதியில் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும் சம்பந்தப்பட்டோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கோயில் கும்பாபிஷேகம் ஏப். 7-ல் நடைபெறுகிறது. ராஜகோபுரத்தில் பழுது சரி செய்யப்படாமலேயே வண்ணம் பூசும் பணி நிறைவடைந்துள்ளது. எனவே, கோயிலில் புனரமைப்புப் பணிகள் முழுமையாக முடியும் வரை கும்பாபிஷேகம் நடத்துவதற்குத் தடை விதித்தும், கோயில் புனரமைப்புப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும், கோயில் புனரமைப்புப் பணிக்கு அரசு வழங்கிய நிதியில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்றை தினம் விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பில், திருப்பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மனுவுக்கு அறநிலையத் துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைய தேதிக்கு (ஏப்ரல் 3) தள்ளிவைத்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை கும்பாபிசேகம் நடத்த கூடாது என உத்தரவிட்டனர். மேலும் மனு தொடர்பாக பதில் அலிக்க இந்து சமய அற நிலையத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரட்டனர்.

Read more: விஜய் டிவி நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்டு..? சீரியலில் நடிக்க தடை..!! என்ன காரணம்..?

English Summary

Interim ban on performing Kumbabhishekam at Kashi Vishwanath Temple in Tenkasi..!!

Next Post

திடீரென போராட்ட களத்தில் குதித்த எடியூரப்பா..!! குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற காவல்துறை..!! பெரும் பரபரப்பு..!!

Thu Apr 3 , 2025
Former Karnataka Chief Minister and senior BJP leader Yediyurappa participated in the protest held today.

You May Like