விக்ரம் நடிப்பில் இன்று (மார்ச் 27 ஆம் தேதி) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட வீர தீர சூரன்’ திரைப்படம், நீதிமன்ற உத்தரவால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விக்ரமின் 62-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை, பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் விகாரமுடன் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் திரையரங்குகளில் இன்று வெளியாக இருந்த நிலையில், படத்தை வெளியிட தடைகோரி B4U entertainment என்ற நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மும்பையை சேர்ந்த B4U நிறுவனம், இப்படத்தில் முதலீடு செய்ததாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, படத்தின் டிஜிட்டல் உரிமையை தயாரிப்பு நிறுவனம், B4U-க்கு எழுதி கொடுத்துள்ளது. ஆனால், ஒப்பந்தத்தின்படி ஓடிடி உரிமை இன்னும் விற்கப்படவில்லை எனவும், அதற்கு முன்னதாக படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்ததால், படம் ஓடிடிக்கு விற்க முடியாமல், 50% நஷ்டம் ஏற்பட்டதாக B4U டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த படம் குறித்து, B4U Entertainment நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், “படத்திற்கு நிதியுதவி வழங்கியதோடு, பல்வேறு உரிமைகள் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழ் படத்தின் literary உரிமை, இசை உரிமை, வட இந்திய மொழிகளில் வெளியீடு, OTT, மற்றும் டிஜிட்டல் வெளியீடுகளுக்கு உரிய அனுமதிகள் மீறப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது. படக்குழுவுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகும், படம் வெளியிடப்பட உள்ளதாக B4U நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது.”
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ‘வீர தீர சூரன்’ படத்தின் வெளியீட்டுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் நாளை (மார்ச் 28) இறுதி தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும் இது குறித்து, படக்குழு அதிகாரப்பூர்வமாக விளக்கம் வழங்கவில்லை. ஆனால், தயாரிப்பு நிறுவனம் சார்பில் படத்தை வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருவதாகக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள், விக்ரம் நடிப்பில் வரும் வீர தீர சூரன் படத்தை எப்போது பார்க்க முடியும் என்பது நீதிமன்ற தீர்ப்பின் மீது தான் இனி அதிகம் சார்ந்துள்ளது.
Read More: வீடு வாடகை கொடுக்க முடியாமல் ரோடு ரோடா அலைந்தோம்..!! – நடிகை ராஷ்மிகா மந்தானா எமோஷனல்