கோவா 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 5 தமிழ் படங்கள் திரையிடப்படவுள்ளன.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவான IFFI ஆண்டுதோறும் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. கோவா சர்வதேச திரைப்பட விழா என்றும் அழைக்கப்படும் இந்நிகழ்வு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இதையடுத்து, இந்தாண்டுக்கான 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதையடுத்து, இந்த திரைப்பட விழாவில் திரையிட 25 படங்கள் தேர்வாகியுள்ளன. அதன்படி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம், கார்பி ஆகிய மொழிகளை சேர்ந்த படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த திரைப்பட விழாவில் தமிழில் இருந்து மொத்தம் 4 படங்கள் திரையிடப்படுகிறது.
இந்திய பனோரமாவில் தேர்வு செய்யப்பட்ட 25 படங்களில் வெற்றிமாறனின் விடுதலை, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய காதல் என்பது பொதுவுடைமை, சம்யுக்தா விஜயன் இயக்கிய நீள நிற சூரியன் ஆகிய படங்கள் இடம்பிடித்துள்ளன. அதேபோல் மெயின்ஸ்ட்ரீம் சினிமா பிரிவில் தேர்வாகியுள்ள 5 படங்களில், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2ஆம் பாகம் திரையிடப்படவுள்ளது. இந்த லிஸ்டில், சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியாகி நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி படமும் இடம்பிடித்துள்ளது. இதற்கிடையே, கன்னடத்தில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த கந்தாரா திரைப்படமும் திரையிடப்படவுள்ளன.