fbpx

International Men’s Day: ‘கண்ணீர் கன்னியரின் சொத்தல்ல’ யாரும் கண்டு கொள்ளாத ஆண்கள் தினத்தின் முக்கியதுவம் இதோ..!!

சர்வதேசிய ஆண்கள் தினமும் நவம்பர் 19 ஆம் தேதிதான் கொண்டாடப்படுகிறது. ஆண்களுக்கு ஆறுதலான ஒரே மாசம் இதுதான். வருசத்துல 364 நாளும் உழைச்சி ஓடா தேஞ்சி போற ஆண்கள் வர்க்கத்துக்கு இந்த ஒரு நாள்தான் கொண்டாட்டம். அந்த வகையில் ஆண்கள் தினம் குறித்த முக்கியதுவத்தை இந்த பதிவில் பார்க்கலாம்..

உலகின் அனைத்து தினங்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் ஆண்களுக்கு கூட ஆண்கள் தினம் என்று என தெரிவதில்லை. பெண்கள் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆண்கள் தினம் அனுசரிக்கப்படுவதன் காரணம் குறித்தும், என்று கொண்டாப்படுகிறது என்பதும் ஏராளமானவருக்கு தெரிவதில்லை. ஆண்களின் மதிப்புகள், குணாதிசயங்களை உணர்த்தும் விதமாகவும் ஆண்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதற்காகவும் ஆண்களை மனம்திறந்து பேச ஊக்குவிப்பதற்காகவும் ஆண்கள் தினம் உருவாக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

காலம் முழுக்க கஷ்டப்பட்டு கட்டெறும்பா தேஞ்சி போற ஆண்களுக்கு தன்னோட உடம்பு மேலையே அக்கறை இருக்குறது இல்ல. அதுனால ஆண்களோட உடல்நலம் குறித்து விழிப்புணர்வு கொடுக்குறதுக்கும், வருங்கால ஆண்களுக்கு ஒழுக்கம், பண்பு, அன்பு, அரவணைப்பு இதல்லாம் போதிக்கிறதுக்கும், ஒழுங்கான முழுமையான ஆணா எப்படி நடந்துக்கணும்னு கத்து கொடுக்குற நாளா இந்த நாளை கடைபிடிக்கிறதா இதை ஆரம்பிச்சவங்க வரலாற்றுல பொன்னெழுத்துக்களால பொறிச்சி வெச்சிட்டு போயிருக்காங்க.

ஒவ்வோர் ஆணுக்குள்ளும் ஒரு பெண்மை இருக்கிறது. ஆனால், அதனை வெளியே காண்பிக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை” என்று தன் ‘Book of the Man’ என்ற புத்தகத்தில் ஓஷோ எழுதியிருப்பார். ஆண்கள் மீது நவீன கால பெண்கள் வைத்திருக்கும் பார்வையும் இன்னும் மாறவில்லை. ஒரு ஆண் என்பவன், பெண்களுக்கு, குடும்பத்திற்கு பாதுகாவலனாக இருக்க வேண்டும். ஆண் தன் பிரச்சனையை தானே சரி செய்துகொள்ளும் வலிமையானவனாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் பணம் சம்பாதிக்க வேண்டும் என இன்றைய காலத்திலும் இந்த சமூகத்தின் அபத்தமான பார்வை மாறாமல் உள்ளது.

ஆணாதிக்கத்திற்கு எதிராக பெண்களுக்கு துணை நிற்கும் ஆண்கள், அதே நேரத்தில் ஆண்களின் பிரச்சனையை அவர்களே பேசுவதில்லை. பெண்களுக்கு அதிகளவு மன அழுத்தம் இருந்தாலும், உலக அளவில் ஆண்களே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்படுகிறது. பெண்கள் தங்கள் பிரச்சனை, கவலைகள் குறித்து மற்றவர்களிடம் பேசி மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி விடுகின்றனர். ஆனால் ஆண் இப்படித்தான் இருக்க வேண்டும் என கட்டமைத்திருக்கும் சமூக கட்டமைப்புகளால் ஆண்கள் உணர்ச்சியை வெளிப்படுத்த நாம் விடுவதில்லை. இதனால் அவர்கள் உள்ளுக்குள்ளே குமுறி மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

Read more ; சுயஇன்பம் முதல் இல்லற வாழ்க்கை வரை.. நடுங்க வைக்கும் எகிப்தியர்களின் வினோத பழக்கங்கள்..!!

English Summary

International Men’s Day is celebrated each year on November 19th to honour and celebrate the men in your life.

Next Post

பெண்களே..!! வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே ரூ.35 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்..!! முதலீடும் கம்மிதான்..!!

Tue Nov 19 , 2024
You can earn up to Rs. 35,000 from home. Let's take a look at a collection of these.

You May Like