fbpx

சர்வதேச மகளிர் தினம்!… கல்லூரி மாணவிகளுக்கு 6 மாத மகப்பேறு விடுமுறை!… கேரள அரசு அறிவிப்பு!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேரளாவில் பல்கலைக்கழக மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான முக்கியத்துவத்தைப் உணர்த்தும் வகையில் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் கேரள பல்கலைக்கழகம் மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு 6 மாதங்கள் வரை மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என கேரள பல்கலைக்கழகம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. ஆறு மாதங்கள் வரை மகப்பேறு விடுப்பில் செல்லும் மாணவர் மீண்டும் அட்மிஷன் முறைகள் தேவையின்றி வகுப்புகளைத் தொடங்கலாம் என அறிவித்துள்ளது.

மேலும் மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் சேர விரும்பும் மாணவர்கள், தங்களின் மருத்துவ சான்றிதழ்களை கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவ சான்றிதழ்கள் நிர்வாகத்தால் சரிபார்க்கப்பட்டு, அதன்பின் மீண்டும் வகுப்பில் சேர அனுமதிக்கப்படும்.விண்ணப்பதாரர்களின் மருத்துவப் பதிவேடுகளைச் சரிபார்த்து, பல்கலைக்கழகத்தின் அனுமதியைப் பெறாமல் அவர்களை மீண்டும் கல்லூரியில் சேர அனுமதிக்கும் பொறுப்பு கல்லூரி முதல்வர்களுடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் ஏற்கனவே பெண் மாணவர்களுக்கான குறைந்தபட்ச வருகையை 75% லிருந்து 73% ஆக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

அனைத்து அரசு பேருந்திலும் பெண்களுக்கு இலவச பயணம்...! மகளிர் தினத்தை முன்னிட்டு முதல்வர் உத்தரவு...!

Wed Mar 8 , 2023
ராஜஸ்தானில் உள்ள பெண்கள் இன்று அரசு பேருந்துகளில் பயணம் செய்ய கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். இந்த இலவசப் பயணத்தின் பலன் இன்று இரவு 11:59 மணி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கான இந்த வசதியை அரசு அறிவித்துள்ளது. நேற்று ஹோலி-துளந்தி பண்டிகையை கொண்டாடிய நிலையில், வேலை, படிப்பு அல்லது பிற வேலைக்காக இன்று பிற நகரங்கள், […]

You May Like