தமிழ்நாட்டில் அனைவருக்கும் குறைந்த விலையில் இன்டர்நெட் இணைப்பு அமைத்துத் தர உள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி காலக்கட்டத்தில் இணையதள சேவை என்பது அவசியமானதாக மாறிவிட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, ஆன்லைன் வகுப்புகள் என பல்வேறு தேவைகளுக்கும் இணையதளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இணைய பயன்பாட்டிற்கான ரீசார்ஜ் கட்டணங்களும் அதிகமாகவே உள்ளன. தனியார் நிறுவனங்களின் ஃபைபர் இணைய வசதியும் மாதத்திற்கு ஆயிரங்களில் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் தான், இணைய தேவை அவசியமாகிவிட்டதை கருத்தில் கொண்டு வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை வழங்கப்பட்டது போல, குறைந்த கட்டணத்தில் இணையதள சேவை கேபிள்கள் மூலம் வழங்கப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 100 Mbps வேகத்தில் மாதம் ரூ.200 கட்டணத்தில் இந்த சேவையை மக்களுக்கு கொண்டுச் செல்லப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
அதேபோல, இ-சேவை மையங்கள் மூலமாக மக்கள் பெறும் சேவைகளை, வாட்ஸ் அப் மூலமாகவே விண்ணப்பித்து பெறும் வகையில், ஒருங்கிணைந்த திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
Read More : எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு போட்ட எம்பி தயாநிதி மாறன்..!! அதிரடியாக ரத்து செய்தது ஐகோர்ட்..!!