fbpx

வேறொரு பெண்ணுடன் நெருக்கம்..? அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள்..!! அதிரடி முடிவை எடுத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்..!!

தமிழ் சினிமாவின் பெருமை இந்திய சினிமாவின் ஐகான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரகுமான். இந்தியளவில் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். இந்நிலையில் தான், ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்து செய்தி அவருடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத அவரது ரசிகர்கள் அந்த சோகத்தில் இருந்து இன்னும் மீண்டு வர முடியாமல் இருந்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஏ.ஆர்.ரகுமான் தனது விவாகரத்தை அறிவித்த மறுநாளே அவர் இசைக் குழுவை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிவதாக அறிவித்தார். அப்போது, இரண்டு சம்பவத்தையும் இணைத்து சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரப்பி வந்தனர். யூடியூபிலும் சிலர் இதுகுறித்து பேசியிருந்தனர். குறிப்பாக நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் மற்றும் பழைய ஜர்னலிஸ்ட் பாண்டியன் ஆகிய இருவரும் மிகவும் அவதூறு பரப்பி வந்தனர்.

தனது இசைக்குழுவில் இருக்கும் பெண் ஒருவருடன், ஏ.ஆர்.ரகுமானை சேர்த்து வைத்து கேவலமாக பேசினர். ஏ.ஆர்.ரகுமான் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது அவரின் மனைவிக்கி பிடிக்கவில்லை என்றும் இதனால் தான், விவகாரத்து முடிவுக்கு வந்திருப்பதாகவும் கூறினர். ஏ.ஆர்.ரகுமான் விமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தார் என்றும் பயில்வான் கூறினார்.

இந்நிலையில் தான், இவை அனைத்திற்கும் முடிவு கட்ட ஏ.ஆர்.ரகுமான் திட்டமிட்டுள்ளார். அதாவது, ஏ.ஆர்.ரகுமான் மீது அவதூறு பரப்பிய அனைத்து ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் மீது புகாரளிக்க முடிவு செய்திருக்கிறார். அவருக்காக ஏராளமான வழக்கறிஞர்கள் வாதாட உள்ளார்களாம். இதனால், ஏ.ஆர்.ரகுமானின் முடிவை தெரிந்து பலரும் பயந்து அவதூறு வெளியிட்ட வீடியோக்களை நீக்கியுள்ளனர்.

Read More : உங்கள் செல்போன் தொலைந்துவிட்டதா..? இனி ஈசியா கண்டுபிடிக்கலாம்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

He has decided to file a complaint against all media outlets and YouTube channels that have spread defamation against A.R. Rahman.

Chella

Next Post

சென்னையில் நாளை முதல் ஆட்டம் ஆரம்பம்.. இந்த தேதி வரை கனமழை வெளுத்து வாங்கும்.. பிரதீப் ஜான் ட்வீட்..

Tue Nov 26 , 2024
Private meteorologist Pradeep John has said that rain will continue in Chennai until December 1.

You May Like