fbpx

ஆன்லைன் கடன் செயலியால் மிரட்டல்…. கடன் வாங்கிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை…!

திருமலை, ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராமராஜூ மாவட்டத்தில் இருக்கும் ராஜவோம்மங்கி அடுத்த லபார்ட்டி கிராமத்தில் வசிக்கும் தம்பதி துர்காராவ்- ரம்யாலட்சுமி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், துர்க்கா ராவ் ஆன்லைன் கடன் செயலி மூலமாக கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாததால், அவரை மிரட்டியுள்ளனர்.

பணத்தை செலுத்தவில்லை என்றால், துர்கா ராவின் மனைவியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். மேலும், அந்த ஆபாச புகைப்படங்களையும் அவருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளனர்.  இதை பார்த்து துர்க்கா ராவ் மற்றும் அவரது மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால், மனமுடைந்த துர்க்காராவ், ரம்யாலட்சுமி இருவரும் கோதாவரி கரையோரத்தில் இருக்கும் லாட்ஜில் அறை எடுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் தாய், தகப்பனை இழந்த இரண்டு குழந்தைகளுக்கும் முதல்வர் ஜெகன் மோகன் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்து, குழந்தைகளை காப்பகத்தில் சேர்த்து படிக்க வைக்கும்படி உத்தரவிட்டு இருக்கிறார்.

Rupa

Next Post

குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரணை என்ற பெயரில் போலீஸ் துன்புறுத்துவது வேதனை …. உயர்நீதிமன்றம் அதிருப்தி …

Sat Sep 10 , 2022
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை காவல்துறையினர் துன்புறுத்துவதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது …மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. ’’குற்றம் சாட்டப்படுபவர்கள் அழைத்துச்செல்லப்பட்டு துன்புறுத்தப்படுகின்றார்கள். விசாரணைக்காக நேரங்காலமின்றி அழைக்கப்படுகின்றார்கள். இதை தடுத்து புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் […]

You May Like