fbpx

ரயில் பயணிகளுக்கு சூப்பர் செயலி அறிமுகம்..!! இனி டிக்கெட் முன்பதிவு செய்வது ரொம்ப ஈசி..!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. ரயில் பயணம் செய்வது டிக்கெட் விலை கம்மியாகவும் மக்கள் சிரமமின்றி பயணம் செய்யவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் பலர் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர். முன்பதிவு செய்யும் போது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை பெறுவதற்கு ஐஆர்சிடிசி புதிய செல்போன் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் பதிவு செய்தால் சில நிமிடங்களில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை பெற்று விடலாம்.

இந்த செயலியின் பெயர் Confirm TKT. இதனை கூகுள் பிளே ஸ்டோர் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம். ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் ஐஆர்சிடிசி செயலியில் தட்கலில் டிக்கெட் புக் செய்கின்றனர். அதனால் டிக்கெட் கிடைப்பது கடினமாக இருந்தாலும் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகவில்லை என்றால் தானாகவே ரத்து செய்யப்படும். அதுமட்டுமின்றி இந்த ஆப் மூலம் சில வழித்தடங்களை சேர்ந்த ரயில்களில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் தட்கல் ஒதுக்கீட்டின் கீழ் கிடைக்கும் இருக்கைகளின் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இந்த செயலி மூலமாக சிறந்த சேவை பெறுவதற்கு இன்டர்நெட் சேவை வேகமாக இருக்க வேண்டும். மேலும், பணம் செலுத்த UPI அல்லது இன்டர்நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்த வேண்டும் அல்லது ஐஆர்சிடிசி மூலமாக எளிதாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Chella

Next Post

குறைந்தது சமையல் எண்ணெய் விலை..!! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!! எவ்வளவு தெரியுமா..?

Thu May 4 , 2023
மத்திய அரசின் ஆலோசனையை ஏற்று, சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், விலையை 6 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளன. சர்வதேச அளவில், சமையல் எண்ணெய் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதை அடுத்து, அவற்றின் விலையை குறைந்துள்ளன. இதையடுத்து, சமையல் எண்ணெய் சில்லரை விற்பனை விலையை குறைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் ஆலோசனையை ஏற்று, சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், விலையை 6% வரை குறைக்க முடிவு செய்துள்ளன. […]

You May Like