fbpx

தெருவோர வியாபாரிகளும் கடன் பெற செயலி அறிமுகம்!… எப்படி விண்ணப்பிக்கலாம்?

மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தெருவோர வியாபாரிகளுக்காக பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி ஸ்வநிதி என்ற கைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செல்போன் செயலி மூலம் தெருவோரம் வியாபாரிகள் இந்த திட்டத்தின் கீழ் கடன்கள் மற்றும் பரிந்துரை கடிதம் பெற விண்ணப்பிக்கலாம்.

தெருவோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதித் திட்டத்தின் கீழ், கொண்டுவரப்பட்டது தான் இந்த சிறப்பு கடன் வசதி அளிப்பதற்கான திட்டம் பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா. இத்திட்டத்தின் கீழ் வியாபாரிகள் ரூ.10,000 வரை கடன் பெற முடியும்.இதில் வாங்கும் கடன் ஓராண்டு காலத்தில் மாதத் தவணைகளில் திரும்பச் செலுத்தப்பட வேண்டும். அப்படி உரிய காலத்தில் இந்தக் கடனை திருப்பி செலுத்தினாலோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே கடனை திருப்பிச் செலுத்தினாலோ ஆண்டொன்றுக்கு 7 சதவீதம் என்ற அடிப்படையில் வட்டியில் மானியம் அளிக்கப்படும்

மேலும் வியாபாரிகள் தங்களுடைய சுயநிதி கடன் விண்ணப்பநிலையையும் இந்த செயலியில் சரி பார்க்கலாம். மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்த திட்டம் தெருவோரம் வியாபாரிகள் தங்களுடைய வணிகங்களுக்காக பிணையற்ற செயல்பாட்டு மூலதன கடனை எளிதாக பெரும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்குவது 2024 ஆம் வருடம் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிக்கலாம்? அடையாள அட்டை மற்றும் வியாபாரச் சான்றிதழ் இல்லாத வியாபாரிகள் இத்திட்டத்தின் கீழ் கடன் வாங்க நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிடம் பரிந்துரைக் கடிதத்தை வாங்கலாம். அக்கடிதம் கிடைத்தவுடன் பிரதமரின் ஸ்வநிதியின் கீழ் கடனுக்காக விண்ணப்பிக்க முடியும். தேவை இருப்பவர்கள் பொது சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது https://pmmodiyojana.in/svanidhi-yojana என்ற இணையதளத்திலும் சென்று பார்க்கலாம்.

Kokila

Next Post

அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் ஆகஸ்ட் 9-ம் தேதி உள்ளூர் விடுமுறை...! சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு...!‌

Sat Jul 29 , 2023
சேலம்‌, அருள்மிகு கோட்டை மாரியம்மன்‌ கோவில்‌ திருவிழாவை முன்னிட்டு 09.08.2023, புதன்கிழமை அன்று சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ளூர்‌ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் சேலம்‌, அருள்மிகு கோட்டை மாரியம்மன்‌ கோவில்‌ திருவிழாவை முன்னிட்டு, சேலம்‌ மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்களுக்கு 09.08.2023, புதன்கிழமை அன்று உள்ளூர்‌ விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர்‌ விடுமுறை. செலாவணி முறிச்சட்டம்‌ 1881.ன்‌ கீழ்‌ வராது […]

You May Like