மின்சார தேவை அதிகரிக்கும் காலத்தில் அதன் கையிருப்பை உறுதி செய்வதற்கான பிரத்தியேக தளத்தை (PUShP- High Price Day Ahead Market and Surplus Power Portal) மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கோடை காலங்களில் போதுமான மின்சார கையிருப்பை உறுதி செய்யும் உத்தியின் ஒரு பகுதியாக இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். பயன்பாட்டில் உள்ள மின்சாரம் அனைத்தும் நுகர்வோருக்கு விநியோகிக்கப்படுவதை இது உறுதி செய்யும். அதிக விலையை நிர்ணயிக்க எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது. ஒரு அலகுக்கு ரூ. 12க்கு மேல் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை மட்டுமே ஹெச்.பி.-டாம் தளத்தில் இயங்க அனுமதிக்கப்படும்.
ஹெச்.பி.-டாம் இயக்க முறையில் விலை நியாயமாக நிர்ணயிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய மின்சார ஆணையம் மற்றும் இந்திய மின்சார விநியோக ஒழுங்குமுறை அமைப்பை அவர் கேட்டுக்கொண்டார்.