அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதியை 328 ஏசி பேருந்துகள் உட்பட 1068 பேருந்துகளிலும் அறிமுகப்படுத்தி உள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்.
சென்னை மாநகரப் பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் இனி யுபிஐ, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் டிக்கெட்டுகளை எடுத்து கொள்ளலாம். கடந்த மார்ச் 1 நிலவரப்படி சென்னையில் 129 மாநகர பேருந்துகளில் மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் உள்ளன, இந்த நடைமுறை அனைத்து பேருந்துகளுக்கும் நடைமுறைப்படுத்த அரசியல் திட்டமிட்டுள்ளது. இதேபோல், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் மற்றும் கூடலூர் செல்லும் விரைவு பேருந்துகளில் சோதனை அடிப்படையில் யுபிஐ முறை கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதியை 328 ஏசி பேருந்துகள் உட்பட 1068 பேருந்துகளிலும் அறிமுகப்படுத்தி உள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம். இதற்குமுன் சென்னை மாநகர பேருந்துகளில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது விரைவு பேருந்துகளிலும் ஜி பே, கிரெடிட கார்ட் மற்றும் டெபிட் கார்ட், ஃபோன் பே மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.