தற்போது அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்யப்படும் பணம் குறைந்த ரிஸ்க்குடன் அதிக வருமானத்தை தருகிறது. இது போன்ற திட்டத்தை தற்போது பார்க்கலாம்.
கிராமப்புற மக்களை இலக்காகக் கொண்ட திட்டங்களை அறிமுகப்படுத்திய இந்திய அஞ்சல் துறை, இப்போது கிராமப்புற திட்டத்தின் ஒரு பகுதியாக கிராம் சுரக்ஷா யோஜனா அல்லது கிராம பாதுகாப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் கீழ் மாதம் ரூ.1,500 டெபாசிட் செய்யும் முதலீட்டாளர்கள் ரூ.31 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை வருமானம் பெறலாம். இந்தியா போஸ்ட் வழங்கும் இந்த பாதுகாப்புத் திட்டம் குறைந்த அபாயத்துடன் அதிக வருமானத்தை வழங்குவதாக பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 19 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதற்குத் தகுதியுடையவர்கள். இந்தத் திட்டத்திற்கான அதிகபட்ச தகுதி வயது வரம்பு 55 ஆகும். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கும். இந்தத் திட்டத்தின் பிரீமியத்தை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் செலுத்தலாம். ஒரு நபர் 80 வயது அல்லது அதற்கு மேல் வாழும் போது இந்தத் திட்டத்தின் பணம் முழு பயனளிக்கும். பிரீமியம் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் சலுகைக் காலம் உண்டு.
மேலும், பாலிசிதாரர் நிலுவையில் உள்ள பிரீமியத்தைச் செலுத்தி பாலிசியைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் கடன் வசதியும் பெற முடியும். வாடிக்கையாளர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசியை ஒப்படைக்கவும் செய்யலாம். இருப்பினும், சில நிபந்தனைகள் இதில் உள்ளன. ஒருவர் 19 வயதில் கிராம் சுரக்ஷா பாலிசி எடுத்தால், அவரது மொத்த முதலீடு ரூ.10 லட்சம் என்று வைத்துக் கொண்டால், 55 வயதில் முதிர்வுக்கான திட்டத்தை அவரால் எடுத்துக் கொள்ள முடியுமானால், மாத பிரீமியம் ரூ.1,515 ஆக இருக்கும்.
இத்திட்டத்தை 58 வயதில் முதிர்ச்சிக்கு எடுத்துக் கொண்டால், மாதாந்திர பிரீமியம் ரூ.1,463 ஆகவும், 60 வயதில் மாத பிரீமியம் ரூ.1,411 ஆகவும் இருக்கும். 55 வருடங்களில் முதிர்வு பெறுபவர் ரூ.31.60 லட்சமும், 58 வருட பாலிசிக்கு ரூ.33.40 லட்சமும் முதிர்வுப் பலன் கிடைக்கும். 60 வருட பாலிசிக்கான முதிர்வு பலன் ரூ.34.60 லட்சம் ஆகும்.