உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஐபோன் 15 சீரிஸ் போன்கள், ரூ.43500 வரை தள்ளுபடி விலையில் வாங்கலாம். Apple iPhone 15 சீரிஸ் இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.79,900-லிருந்து தொடங்குகிறது. தற்போதுள்ள Apple iPhone வாடிக்கையாளர்கள் iPhone 15-ஐ ரூ.40,000-க்கும் குறைவாக வாங்க பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்தலாம். நான்கு புதிய போன்களில் மலிவான ஐபோன் 15, இந்தியாவில் 128 ஜிபி வகைக்கு ரூ.79,900 விலையில் கிடைக்கிறது.
அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் 256 ஜிபி சேமிப்பு மாறுபாட்டிற்கு ரூ.89,900 மற்றும் 512 ஜிபி சேமிப்பு மாறுபாட்டிற்கு ரூ.1,09,900 செலுத்த வேண்டும். இருப்பினும், நீங்கள் ஏற்கனவே ஆப்பிள் வாடிக்கையாளராக இருந்து, உங்கள் ஸ்மார்ட்போனை Apple iPhone 15 -க்கு மேம்படுத்த விரும்பினால், அதை எப்படி எளிதாக 40,000 ரூபாய்க்கு வாங்கிச் செல்லலாம் என்பதை பார்க்கலாம்.
ஐ போன் 13 மாடலை பரிமாற்றம் செய்வதன்மூலம் ரூ.37,500 தள்ளுபடி செய்யப்படும். மேலும் ஹெச்டிஎப்சி கார்டு மூலம் ஐபோன் 15 சீரிஸ் வாங்கினால் அதற்கு கூடுதலாக ரூ.6000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த யுக்தியை பயன்படுத்தினால், ரூ.36,400க்கு ஐபோன் 15 மாடலை வாங்கலாம்