fbpx

iPhone | அரசு அதிகாரிகள் ஐஃபோன், ஐபேடு சாதனங்கள் பயன்படுத்த தடை..!! ஏன் தெரியுமா..?

உக்ரைன் மீது கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. உக்ரைன் மீதான ஆக்ரமிப்பை அடுத்து ஆப்பிள் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து வெளியேறியது. மேலும், அதன் விற்பனையையும் நிறுத்தியது. ஆனால், மற்ற நாடுகளிலிருந்து ரஷ்யாவுக்கு ஐபோன் (iPhone) மற்றும் ஐபேடு (iPad) சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே, ரஷ்ய மக்களால் பயன்படுத்தப்படும் ஆப்பிள் நிறுவன சாதனங்களால், நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து, ரஷ்ய டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் ஒரு சுற்றறிக்கையில், “ஐபோன் மற்றும் ஐபேடு மூலமாக அமெரிக்கா, ரஷ்ய மக்களின் தகவல்கள் திருடும் ஆபத்து இருக்கிறது. எனவே, ஐபோன்கள் மற்றும் ஐபேடுகளை வேலை நோக்கங்களுக்காக ரஷ்ய அரசு அதிகாரிகள் இனி பயன்படுத்தக் கூடாது. பணி பயன்பாடுகளுக்கான செயலிகளை உபயோகப்படுத்தவும், வேலை சம்பந்தமான மின்னஞ்சல் பரிமாற்றத்தை செய்யவும், ஆப்பிள் நிறுவன ஃபோன்களையும், டேப்லெட்டுகளையும் பயன்படுத்தக் கூடாது. தனிப்பட்ட தேவைகளுக்காக ஐபோன்களைப் பயன்படுத்தலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

திருவனந்தபுரம் அருகே,பிரபல செய்தி நிறுவன அலுவலகத்தில் புகுந்து, பொருட்களை சேதப்படுத்திய நபரை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்…..!

Mon Aug 14 , 2023
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பிரபல செய்தி நிறுவன அலுவலகத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த, காரை சேதப்படுத்திய மர்ம நபர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கின்ற பிரபல செய்தி நிறுவனமான ஏசியாநெட் செய்தி நிறுவனத்தின் அலுவலகம் மீது, இன்று அதிகாலை 5 மணி அளவில் ஒரு மர்ம நபர் தாக்குதல் நடத்தி இருக்கிறார். அதிகாலை நேரத்தில், அந்த அலுவலகத்தின் […]

You May Like