fbpx

Baby is on The Way | “குழந்தை வந்துட்டு இருக்கு; மேட்ச்ச சீக்கிரம் முடிங்க…” சிஎஸ்கே-விடம் கோரிக்கை வைத்த சாக்ஷி தோனி.!!

Baby is on The Way: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46 ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடந்த இரண்டு போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த நிலையில் இந்த வெற்றி சென்னை ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது நடைபெற்ற ஒரு சுவாரசியமான சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துள்ளது. நேற்றைய போட்டியை காண சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி தோனி சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்திற்கு வந்திருந்தார்.

நேற்றைய போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கிய போது தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ஸ்டோரி பதிவு செய்திருந்த அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் போட்டியை விரைந்து முடிக்குமாறு வேண்டுகோள் வைத்தார். அத்தையாக போகிறேன் என தெரிவித்த அவர் போட்டியை சீக்கிரம் முடியுங்கள் குழந்தை வந்து கொண்டிருக்கிறது என பதிவு செய்திருந்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

முன்னதாக நேற்று நடைபெற்ற IPL 2024 போட்டியில் முதலில் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழந்து 212 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்ராஜ் மிகச் சிறப்பாக விளையாடி 54 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருடன் சிறப்பாக விளையாடிய டேரில் மிச்சல் 32 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

212 ரன்கள் என்ற இலக்கை துரத்தி ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.5 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் வீரர் மார்க்ரம் அதிகபட்சமாக 26 பந்துகளில் நான்கு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சிஎஸ்கே அணியின் பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

Next Post

கணவர் இல்லாத நேரம்… அண்ணியிடம் மைத்துனர்..! வீடியோவை காண்பித்து…! அரங்கேறிய கொடூரம்..

Mon Apr 29 , 2024
முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், கடவ்லி கொத்வாலி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 2ம் தேதி தன் கணவர் வெளியே சென்றபோது, யாரும் இல்லாத நேரத்தில், கணவரின் சகோதரர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ மூலம் மிரட்டியதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து, வெளியே சென்ற கணவர், வீடு திரும்பியதும் அவரிடம், அழுது கொண்டே நடந்ததை அந்த பெண் கூறியுள்ளார். ஆனால் அவருக்கு […]

You May Like