CSK – MI: ஐபிஎல் 2025 சீசன் மார்ச் 22 ம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் அட்டவணை அறிவிக்கப்படும் போதெல்லாம், அனைவரின் பார்வையும் மிகவும் தீவிரமான போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகளுக்கு இடையேயான போட்டியின் மீது ஈர்க்கப்படுகிறது. அந்தவகையில் ஐபிஎல் 2025 இன் முதல் எல் கிளாசிகோ, சென்னை – மும்பை போட்டி, மார்ச் 23 அன்று, நடைபெற உள்ளது. சீசன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியை ஈடன் கார்டன்ஸில் எதிர்கொள்கிறது.
இதையடுத்து, 23ம் தேதி நடைபெறும் இரட்டை ஆட்டத்தில் முதலில் SRH அணி மதியம் ஐதராபாத்தில் உள்ள சொந்த மைதானத்தில் RR அணியை எதிர்கொள்ளும், அதைத் தொடர்ந்து CSK மற்றும் MI அணிகளுக்கு இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோதல் 23ம் தேதி மாலை நடைபெறவுள்ளது. இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகள், ஒவ்வொன்றும் ஐந்து முறை பட்டத்தை வென்றுள்ளன.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளதால் ஐபிஎல் 2025 அட்டவணையை பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது மைதானங்கள் மற்றும் ஐபிஎல் அணிகளுக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியை தொடர்ந்து இரண்டு போட்டியில் கடந்த ஆண்டு ரன்னர்-அப் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் விளையாட உள்ளனர்.