IPL Retention: ஐ.பி.எல்., தொடரின் 18வது சீசன், 2025ல் நடக்க உள்ளது. இதற்கான வீரர்கள் ‘மெகா’ ஏலம், இம்மாதம் நடக்க உள்ளது. இதற்கு முன் ஒவ்வொரு அணியிலும் 5 அல்லது 6 வீரர்கள் தக்கவைக்கப்பட்டு மற்ற வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கான கடைசி நாள் நேற்று முடிந்த நிலையில், அணிகள் விபரம் வெளியானது. சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ் (ரூ. 18 கோடி), ஜடேஜா (ரூ. 18 கோடி), பதிரானா (ரூ. 13 கோடி), துபே (ரூ. 12கோடி), தோனி (ரூ. 4 கோடி) என ஐந்து வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். இதனால் வரும் சீசனில் தோனி விளையாடுவது உறுதியானது.
பெங்களூரு அணி சார்பில் கோலி (ரூ. 21 கோடி), ரஜத் படிதர் (ரூ. 11 கோடி), யாஷ் தயாள் (ரூ. 5 கோடி) என மூன்று வீரர்கள் மட்டும் தக்கவைக்கப்பட்டனர். பும்ரா (ரூ. 18 கோடி), ஹர்திக் பாண்ட்யா (ரூ. 16.35 கோடி), சூர்யகுமார் (ரூ. 16.35 கோடி), ரோகித் சர்மா (ரூ. 16.30 கோடி), திலக் வர்மா (ரூ. 8 கோடி) மும்பை அணியில் தொடர்கின்றனர். கிளாசன் (ரூ. 23 கோடி), கம்மின்ஸ் (ரூ. 18 கோடி), அபிஷேக் (ரூ. 14 கோடி), டிராவிஸ் ஹெட் (ரூ. 14 கோடி), நிதிஷ் குமாரை (ரூ. 6 கோடி) ஐதராபாத் அணி தக்கவைத்தது.
கோல்கத்தா அணியில் ரிங்கு சிங் (ரூ. 13 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ. 12 கோடி), சுனில் நரைன் (ரூ. 12 கோடி), ரசல் (ரூ. 12 கோடி), ஹர்ஷித் ராணா (ரூ. 4 கோடி), ராமன்தீப் சிங் (ரூ. 4 கோடி) என 6 வீரர்கள் தொடர்கின்றனர். பஞ்சாப் அணி ஷசாங்க் சிங் (ரூ. 5.5 கோடி), பிரம்சிம்ரன் (ரூ. 4 கோடி) என இரு வீரர்களைத் தவிர, மற்ற அனைவரையும் விடுவித்துள்ளது. ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் (ரூ. 18 கோடி), ஜெய்ஸ்வால் (ரூ. 18 கோடி), ரியான் பராக் (ரூ. 14 கோடி), துருவ் ஜுரல் (ரூ. 14 கோடி), சந்தீப் சர்மா (ரூ. 4 கோடி) தக்கவைக்கப்பட்டனர்.
டில்லி அணி கேப்டன் ரிஷாப் பன்ட், கோல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ், லக்னோ அணி கேப்டன் ராகுல் விடுவிக்கப்பட்டனர். தவிர பட்லர், சகால் (ராஜஸ்தான்), ஸ்டார்க், (கோல்கட்டா), மேக்ஸ்வெல் (பெங்களூரு), இஷான் கிஷான் (மும்பை) உள்ளிட்டோர் சேர்க்கப்படவில்லை.
Readmore: ஷாக்!. இந்தியாவை அழிக்க முயற்சி நடக்கிறது!. பிரதமர் மோடி பேச்சு!