IPL 2025: கொரோனா தொற்று காரணமாக தடைசெய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பந்தில் எச்சில் பயன்படுத்த பவுலர்களுக்கு பி.சி.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது.
18 வது ஐபிஎல் தொடர் வரும் நாளை (மார்ச் 22) தொடங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில், நாளை நடைபெற உள்ள முதல் போட்டியில், கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக 2 விதிகளை பிசிசிஐ அமல்படுத்த உள்ளது. மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று, ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் மற்றும் நடுவர்கள் உடனான நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பந்து தேய்ந்துள்ள நிலையில், பந்து வீச்சாளர்கள் reverse swing செய்வதற்காக, பந்தின் ஒரு பக்கத்தில் எச்சில் தடவி, அதை பளபளப்பாக மாற்றுவார்கள். 2019 ஆம் ஆண்டு கொரோன காலக்கட்டத்தில், பந்து வீச்சாளர்கள் பந்தில் எச்சில் பயன்படுத்த ஐசிசி தடை விதித்தது. இந்த தடையை நீக்குமாறு, முகமது ஷமி, டிம் சவுத்தி, வெர்னான் பிலாண்டர் உள்ளிட்ட பந்து வீச்சாளர்கள் ஐசிசிக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் பந்தில் எச்சில் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
அதே போல் இரண்டாவது பந்து(second ball rule) என்ற விதியை இந்த ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மாலை நேரங்களில் நடைபெறும் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும் போது மைதானத்தில் பனியின் தாக்கம் இருக்கும் போது, பந்து வீச்சாளர்களை பந்தை பிடிப்பது கடினமாக இருக்கும். இந்த இயற்கை சூழல் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த விதி அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, மாலை நேரங்களில் நடைபெறும் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் 11வது ஓவர்களுக்கு பிறகு பந்தை மாற்ற வேண்டுமா என்பதை மைதானத்தில் நிலவும் பனியை பொறுத்து நடுவர் முடிவெடுப்பார். பிற்பகலில் பனியின் தாக்கம் இருக்காது என்பதால் அப்போது நடைபெறும் போட்டிகளில் இந்த விதி இருக்காது.
Readmore: அடேங்கப்பா!. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கு இத்தனை கோடி செலவா?. US-க்கு மட்டும் தனி ரேட்!