fbpx

ஐபிஎல் ஒளிபரப்பு விவகாரம்… தமன்னாவுக்கு சம்மன்… ஆஜராக அவகாசம் கோரி கடிதம்

Fairplay செயலியின் விளம்பர தூதுவரான நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் க்ரைம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.இந்த நிலையில் சம்மன் தொடர்பாக ஆஜராக அவகாசம் கோரியுள்ளார் நடிகை தமன்னா.

வழக்கின் விவரம்: கடந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் (viacom) பெற்றிருந்தது. அதேநேரத்தில், அந்த ஆண்டு மிகப் பிரபலமான செயலிகளில் ஒன்றாக விளங்கிய Fairplay செயலியில், IPL 2023 போட்டி சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்டது. Fairplay செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக வியாகாம் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இது தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி, Fairplay செயலியின் விளம்பர தூதுவரான நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் க்ரைம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தது.

ஏப்ரல் 29ல் நடிகை தமன்னா நேரில் ஆஜராகும்படி சம்மன் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமன்னா ஆஜராகவில்லை. மேலும் தற்போது தான் மும்பையில் இல்லை. எனவே ஆஜராகி விளக்கமளிக்க அவகாசம் வேண்டும் என மகாராஷ்டிரா சைபர் துறையிடம் அவகாசம் கோரியுள்ளார் நடிகை தமன்னா.

Read More: திருமணத்திற்கு முன்பு லிவிங்கில் இருக்க ஆசை! விருப்பம் தெரிவித்த பாரதி கண்ணம்மா ரோஷினி!

Baskar

Next Post

"எல் நினோ" "லா நினோ" இந்தியாவின் காலநிலையை எவ்வாறு பாதிக்கிறது?

Tue Apr 30 , 2024
பசிபிக் பெருங்கடலில் நிலவிய எல் நினோ முடிவுக்கு வந்துள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எல் நினோலா நினா என்றால் என்ன, அது இந்தியாவின் காலநிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். எல் நினோ மற்றும் லா நினா என்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி பருவமழையின் தொடக்கத்திலோ அல்லது குளிர்காலத்தின் தொடக்கத்திலோ கேட்டிருப்போம்.இரண்டும் உலக வெப்பநிலை மற்றும் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. எல் நினோவின் போது, ​​2023-2024ல் […]

You May Like