fbpx

ஐபிஎல்!… சென்னை-லக்னோ இடையேயான லீக் ஆட்டம் மழைக் காரணமாக கைவிடப்படுவதாக அறிவிப்பு!

ஐபிஎல் தொடரின் சென்னை – லக்னோ இடையேயான போட்டி மழைக் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்ற 45வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி தொடக்கம் முதலே சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

அதிகபட்சமாக பதோனி 59 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை அதிகரிக்க உதவினார். இதனால் லக்னோ அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. 20வது ஓவரில் 2 பந்துகள் வீசப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. சென்னை அணி சார்பில் மொயின் அலி, பதிரனா மற்றும் தீக்ஷனா தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். தொடர்ந்து மழை பெய்து வந்ததால், சென்னை – லக்னோ இடையிலான போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

செம...! தமிழக அரசு சார்பில் ரூ.2.25 லட்சம்‌ மானியம்...! 38 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்...!

Thu May 4 , 2023
தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டுவசதி மற்றும்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ (தாட்கோ) மூலமாக தொழில்‌ முனைவோரின்‌ பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும்‌ வகையில்‌ தமிழ்நாடு சிமெண்ட்‌ கழகத்தின்‌ விற்பனை முககர்‌ திட்டத்தில்‌ வருவாய்‌ ஈட்டிட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது என காஞ்சிபுரம்‌ மாவட்ட ஆட்சித்‌தலைவர்‌ தெரிவித்துள்ளார்‌. ஆதிதிராவிடர்‌ நலத்துறை அமைச்சர்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ தொழில்‌ முனைவோரின்‌ பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும்‌ வகையில்‌ தமிழ்நாடு சிமெண்ட்‌ விற்பனை முகவர்‌ திட்டத்தை அறிவித்தார்கள்‌. […]

You May Like