fbpx

ஐபிஎல்!… முழங்கால் காயத்துடன் விளையாடிவருகிறார் தோனி!… சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி முழங்கால் காயத்தால் அவதிப்பட்டுவருவதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் ஐபிஎல் 16வது சீசனின் 17வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜோஸ் பட்லரின் அதிரடி அரைசதம்(52) மற்றும் தேவ்தத் படிக்கல்(38), அஷ்வின் (30), ஹெட்மயர்(30) ஆகியோரின் பங்களிப்பால் 20 ஓவரில் 175 ரன்கல் அடித்தது. 176 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியின் தோனி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் கடைசியில் சிக்ஸர்களாக விளாசி கடுமையாக போராடிய போதிலும் 20 ஓவரில் 172 ரன்கள் அடித்து 3 ரன் வித்தியாசத்தில் தோற்றது. தனது 200வது ஐபிஎல் போட்டியான இந்த போட்டியில் 17 பந்தில் 32 ரன்களை விளாசினார் தோனி.

இந்நிலையில், தோனி குறித்து பேசியுள்ள சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங், தோனி முழங்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது சில அசைவுகளில் முழங்கால் காயத்தால் அவர் கஷ்டப்படுவது தெரியும். ஆனால் தொழில்முறை கிரிக்கெட்டுக்கான நல்ல ஃபிட்னெஸை பெற்றிருப்பதால் தான் அவரால் ஆடமுடிகிறது. சிசாண்டா மகாளாவும் காயத்தால் 2 வாரத்திற்கு ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார் என்று ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் நீங்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் ஆகலாம்! உடனே விண்ணப்பிக்க தயாராகுங்கள்!

Fri Apr 14 , 2023
தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் வாட்ச்மேன், டைப்பிஸ்ட், எலக்ட்ரீசியன் மற்றும் கிளீனர் ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்காக தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி மேல் கண்ட பணிகளுக்கு ஏழு காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு தகுதியான மற்றும் விருப்பமுள்ள […]

You May Like