தன்னால் நடக்க முடியாத வரைஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என ஆஸ்திரேலிய கிரிக்கெட்அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதில் பெரிய அளவிலான பங்களிப்பை க்ளென் மேக்ஸ்வெல் வழங்கியிருந்தார். உலகக்கோப்பை தொடரில் கால்வலியால் அவதிப்பட்ட க்ளென் மேக்ஸ்வெல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் டி 20 தொடரில் மீண்டும் ஒரு முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக களமிறங்க உள்ளார். இந்நிலையில் மெல்பர்ன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிளென் மேக்ஸ்வெல், ஐபிஎல் தன்னுடைய வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கிறது என்பது குறித்து பகிர்ந்துகொண்டார்.
அதில், அநேகமாக ஐபிஎல் தொடரே நான் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும், என்னால் இனிமேல்நடக்க முடியாது என்ற சூழ்நிலை வரும் வரை ஐபிஎல் தொடரில் விளையாடுவேன். எனது வாழ்க்கை முழுவதும், ஐபிஎல் எனக்கு எவ்வளவு நன்றாக இருந்தது என்பதைப் பற்றி பேசுவேன். நான் சந்தித்த நபர்கள், பயிற்சியாளர்கள், தோளோடு தோள்கள் சேர்க்கும் சர்வதேச வீரர்கள் என ஐபிஎல்தொடர் எனது முழு வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளது.
டி வில்லியர்ஸ், விராட் கோலிஆகியோருடன் இரண்டு மாதங்களாக தோளோடு தோள் சேர்த்து பழகுகிறேன். மற்ற ஆட்டங்களைப் பார்த்துக் கொண்டே அவர்களுடன் உரையாடுகிறேன். எந்த வீரரும் விரும்பக்கூடிய மிகப்பெரிய கற்றல் அனுபவம் இது. அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்குஇந்தியத் தீவுகளில் நடைபெறும் டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல்-லில் விளையாட வேண்டும்.
இது உலகக் கோப்பை தொடருக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். ஏனெனில் ஐபிஎல் தொடரின்ஆட்ட சூழ்நிலைகளும், மேற்குஇந்தியத் தீவுகளில் நிலவுக்கூடியசூழ்நிலைகளும் ஓரளவு ஒரே மாதிரியாக இருக்கும். ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக்கோப்பை முடிந்தவுடனேயே அடுத்த உலகக்கோப்பைக் குறித்து கவனம் செலுத்தத் தொடங்கி விட்டோம்.