fbpx

சென்னையில் இன்றுமுதல் ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள்!… மெட்ரோவில் பயணிக்க டிக்கெட் அவசியம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளை காண மெட்ரோவில் வரும் பயணிகள் பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடப்பாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் ஐபிஎல் டிக்கெட்டில் உள்ள கியூஆர் கோடை பயன்படுத்தி மெட்ரோவில் எந்த வித கட்டணமும் இல்லாமல் பயணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்துடன் இணைந்து மெட்ரோ நிர்வாகம் இந்த சலுகையை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால், மே 23 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெறவுள்ள பிளே ஆஃப் போட்டிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்த உள்ளது. எனவே அந்த தேதிகளில் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் பிளேஆஃப் போட்டிகளை காண வரும் கிரிக்கெட் ரசிகர்கள், மற்றும் மெட்ரோ பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கு வழக்கமான பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், சென்னையில் போட்டி நடைபெறும் நாட்களில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக இரவு 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இரவு 11 மணிக்கு மேல் டிக்கெட் கவுண்டர்கள் செயல்படாது என்பதால், மெட்ரோ வாட்ஸ்அப் எண் அல்லது மெட்ரோ செயலியில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முதல் பிளே ஆஃப் சுற்றிலும், மற்றும் மே 24-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணிகள் எலிமினேட்டர் சுற்றிலும் மோதவுள்ளன.

Kokila

Next Post

பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகள் வாங்கப்படும்!... தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம்!

Tue May 23 , 2023
தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும் என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த 19-ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்த நிலையில், 2000 ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இன்று முதல் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி […]
பெட்ரோல், டீசல் வாங்க பொதுமக்களுக்கு திடீர் கட்டுப்பாடு..! யார் யார் எவ்வளவு வாங்கலாம்?

You May Like