fbpx

ஐபிஎல்!… காவல்துறையிடம் புகார் அளித்து கேலியான ட்ரோல் செய்த பஞ்சாப்!… மும்பை கொடுத்த பதிலடி ட்வீட்!

பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றதையடுத்து, மும்பை அணி, பஞ்சாப் அணியின் ட்ரோல்-க்கு ட்வீட் மூலம் பதிலடி கொடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் மொகாலியில் நடைபெற்ற 46வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்து அதிரடியாக விளையாடி 214 ரன்கள் குவித்தது. இதனையடுத்து மிகப்பெரிய இலக்கை துரத்திய மும்பை அணி இஷான் கிஷன், சூர்யகுமார் ஆகியோரின் அதிரடியால் 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து எளிதாக இலக்கை அடைந்தது. இந்த வெற்றிக்கு பிறகு மும்பை அணி, தனது ட்விட்டரில் அனைத்து காவல்துறைக்கும் என்று பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். முன்னதாக மும்பை-பஞ்சாப் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வீரர் அர்ஷ்தீப் சிங் மும்பை அணியின் விக்கெட்களை இருமுறை ஸ்டம்ப்களை உடைத்து வீழ்த்தினார்.

அப்போது பஞ்சாப் அணி தனது ட்வீட்டில், ஸ்டம்ப்களை உடைத்ததற்கு மும்பை காவல்துறையிடம் நாங்கள் ஒரு குற்றத்தை பதிவு செய்ய விரும்புகிறோம் என்று கேலியாக பதிவிட்டிருந்தனர், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மும்பை அணி நேற்றைய வெற்றிக்கு பிறகு ‘அனைத்து காவல்துறைக்கும் ஒரு பதிவு, என ட்வீட் செய்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இங்கு குற்றம் பதிவு செய்யும் அளவுக்கு எதுவும் நிகழவில்லை, நாங்கள் இங்கே மொகாலியில் கிரிக்கெட் விளையாட வந்து, ஒரு அணியை வீழ்த்தியுள்ளோம். உங்களுக்கு வேறு முக்கியமான வேலை இருக்கும், உங்களது சேவைக்கும் அது எப்போதும் தொடரவேண்டும் எனவும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளது.

Kokila

Next Post

உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் இந்தியா முதலிடம்!... விவாகரத்து வழக்குகளில் கடைசி இடம்!... புள்ளிவிவரம் இதோ!

Sat May 6 , 2023
உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, குடும்ப அமைப்பு மற்றும் விழுமியங்களைப் பராமரிப்பதில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது. இங்கு விவாகரத்து வழக்குகள் 1 சதவீதம் மட்டுமே உள்ளன என்று புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, உலகிலேயே போர்ச்சுகல் நாட்டில் தான் அதிகளவு திருமண முறிவுகள் நடக்கின்றன. இதில் இந்தியா கடைசி இடத்தில் இருப்பது ஆறுதலான விசயம். ஆசிய நாடுகளில் விவாகரத்து வழக்குகள் குறைவாகவே உள்ளன, அதே சமயம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிக குடும்பங்கள் […]
’அவசரப்பட்டியே குமாரு’..!! வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் செய்த காரியம்..!! திருமணத்தை நிறுத்திய மணமகள்..!!

You May Like