IPL schedule: ஐபிஎல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியீடப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் முதல் போட்டி மார்ச் 23 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே மும்பை அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதே போன்று ஆர்சிபி அணி உடனும் சிஎஸ்கே அணி 2 போட்டிகளில் விளையாட உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூரு அணி உடன் மோத உள்ளது. இந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதே போன்று முதல் ப்ளே ஆஃப் சுற்று ஐதராபாத் மைதானத்திலும் இறுதி போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த முறை ப்ளே ஆஃப் சுற்றுகள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவிட்டாலும் லீக் போட்டிகளில் சிஎஸ்கே அணி மும்பை அணி உடன் 2 போட்டிகளில் விளைாயட உள்ளது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. கடந்த முறை சிஎஸ்கே மும்பை அணி உடன் ஒரு போட்டியில் மட்டுமே மோதியது. சிஎஸ்கே – மும்பை அணிகள் மார்ச் 23 ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.
சிஎஸ்கே அணி அட்டவணை: போட்டி அட்டவணை: மார்ச் 23ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மார்ச் 28 (வெள்ளிக்கிழமை) – சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக, இரவு 7.30 மணி.
மார்ச் 30 (ஞாயிற்றுக்கிழமை) – குவஹாத்தியின் பர்சபரா மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக, இரவு 7.30 மணி.
ஏப்ரல் 5 (சனிக்கிழமை) – சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக, பிற்பகல் 3.30 மணி.
ஏப்ரல் 8 (செவ்வாய்க்கிழமை) – முல்லன்பூர் மகாராஜா யாதவிந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக. இரவு 7.30 மணி.
ஏப்ரல் 11 (வெள்ளிக்கிழமை) – சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக, இரவு 7.30 மணி.
ஏப்ரல் 14 (திங்கள்) – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக லக்னோவின் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில், இரவு 7.30 மணி.
ஏப்ரல் 20 (ஞாயிற்றுக்கிழமை) – மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக, இரவு 7.30 மணி.
ஏப்ரல் 25 (வெள்ளிக்கிழமை) – சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக, இரவு 7.30 மணி.
ஏப்ரல் 30 (புதன்கிழமை) – சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக, இரவு 7.30 மணி.
மே 3 (சனிக்கிழமை) – பெங்களூரு எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக, இரவு 7.30 மணி.
மே 7 (புதன்கிழமை) – கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக.இரவு 7.30 மணி.
மே 12 (திங்கள்) – சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக, இரவு 7.30 மணி.
மே 18 (ஞாயிற்றுக்கிழமை) – அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக, பிற்பகல் 3.30 மணி.
Readmore: சட்ட ரீதியில் தான் விகடன் இணையதளம் முடக்கப்பட்டது…! மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கம்…!