fbpx

ஈரான் – இஸ்ரேல் போர்..!! இந்தியர்களே பாதுகாப்பா இருங்க..!! வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை..!!

ஈரான் – இஸ்ரேல் இடையே நிலவும் போர் சூழலால் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் கடந்த 1ஆம் தேதி ஈரான் துணை தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஈரானின் ராணுவத் தளபதிகள் இருவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன் பதில் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஈரான் – இஸ்ரேல் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனை சுட்டிக்காட்டியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ”இந்தியர்கள் யாரும் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஈரான், இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதி முக்கியத்துவம் வாய்ந்த காரணங்கள் இன்றி எங்கும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Read More : தனது பாணியில் அண்ணாமலையை வறுத்தெடுத்த மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ..!! அவர் ஒரு சுஜுபி..!!

Chella

Next Post

”தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை”..!! வெளியான அதிர்ச்சி சர்வே முடிவுகள்..!!

Sat Apr 13 , 2024
கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை இந்திய மக்களிடையே குறைந்துவிட்டதாக சிஎஸ்டிஎஸ் நடத்திய சர்வே முடிவுகளில் தெரியவந்துள்ளது. நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் இந்த லோக்சபா தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த லோக்சபா தேர்தல் தொடர்பாக பல்வேறு சர்வே […]

You May Like