fbpx

அடேங்கப்பா youtube மூலமாக ஒருவர் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா…..? மூக்கில் விரல் வைக்கும் சொத்து மதிப்பு…..!

தற்போது உள்ள காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் யாரும் கட்டட வேலைக்கு செல்வதையோ அல்லது ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றுவதையோ விரும்புவதில்லை. அவர்கள் விரும்புவதெல்லாம், சொந்தமாக ஒரு youtube சேனல் தொடங்கி அதன் மூலமாக பிரபலம் அடைந்து பின்பு அதிலிருந்து வருமானத்தை பார்க்க வேண்டும் என்பதாகத்தான் உள்ளது.

சரி தமிழகத்தில் பல youtube பிரபலங்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய சொத்து மதிப்பு என்னவாக இருக்கும்? அவர்களுக்கு எப்படி வருமானம் வருகிறது? எதன் அடிப்படையில், youtube வலைதளத்தில் சம்பாதிக்க முடிகிறது. என்பது பற்றி பலர் அறிய ஆவலாக இருப்பீர்கள் இது உங்களுக்கான செய்தி குறிப்பு தான்.

அதேபோல ஒருவர் யூடியூப் மூலமாக எவ்வளவு சம்பாதிக்கிறார்? எப்படி சம்பாதிக்கிறார்? என்ற நுணுக்கங்களை தெரிந்து கொள்வதன் மூலமாக நீங்கள் ஒரு youtube சேனலை தொடங்குவதற்கு வசதியாக இருக்கும்.

ஒவ்வொரு youtube வருமானமும் அதன் சப்ஸ்கிரைபர் மற்றும் பார்வையாளர்கள், வாடிக்கையாளர்கள் அந்த youtube சேனல் தொடங்கப்பட்ட இடத்தை பொறுத்து பல காரணிகளின் அடிப்படையில், வருமானம் மாறுபட்டதாக இருக்கும் அந்த வகையில், பொதுவாக ஒருவருடைய யூடியூப் சேனலில் ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர் இருந்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை தற்போது நாம் பார்க்கலாம்.

அதாவது ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர் கொண்ட ஒரு யூடியூப் சேனலுக்கு 1.98 லட்சம் ரூபாய் முதல் 3.29 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நிச்சயமாக இதில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படலாம். ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர் கொண்ட ஒரு யூடியூப் சேனலில் பல பொருட்களையும் விளம்பரம் செய்வதன் மூலமாக கூடுதலான வருமானத்தை நம்மால் பெற முடியும்.

Youtube கம்பனியின் வருமானம் ஈர்க்கும் அளவையும், வாய்ப்பையும் அதிகரிப்பதற்காக அந்த நிர்வாகம் சமீபத்தில் 12 மாதத்தில் ஆயிரம் சப்ஸ்கிரைப் மற்றும் 4000 மணி நேரம் பார்வை இருந்தால் மட்டும் போதும் என்று தெரிவித்திருக்கிறது. இந்த தகுதியை பூர்த்தி செய்தாலே ஒரு youtube சேனல் பகுதியில் போடப்படும் வீடியோவுக்கு வருமானம் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

ஆனால் youtube மற்றும் சமூக வலைதளத்தில் இன்று பலர் பிரபலமாக திகழ்ந்து வந்தாலும், பல பேர் இன்னும் ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர் பெற முடியாமல் தவித்து வருகிறார்கள். இப்படியான சூழ்நிலையில், youtube கன்டென்ட் கிரியேட்டராக முழு நேர பணியை செய்ய ஒருவர் முடிவு செய்தாலும், அதனை நன்றாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

ஒருவருடைய நிதிநிலை வெகு காலம் முயற்சி குடும்ப பொறுப்புகள் எதிர்கால வருவாய் ஈட்டும் நிலை என்று பல தன்மைகள் இதில் இருக்கிறது. இளம் தலைமுறையினர் முழுநேர கண்டன்ட் கிரியேட்டராக வளர பல பெற்றோர்கள் ஊக்கப்படுத்தினாலும், எதிர்காலத்தையும் யோசித்து முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது.

Next Post

BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! மாதம் ரூ.90,000 வரை ஊதியம்…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்…!

Thu Aug 3 , 2023
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Jr. Supervisor, Havildar பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 42 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு 15 ஆண்டுகள் […]

You May Like