fbpx

இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியமா..? மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

தற்போது உள்ள சூழ்நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு 2-வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டுமா? என்பது பற்றி மத்திய அரசு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இந்நிலையில், சீனா மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளை மத்திய அரசு ஏற்கனவே கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 220.11 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 95.13 கோடி இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் 22.41 கோடி பூஸ்டர் டோஸ் ஊசியும் போடப்பட்டுள்ளன.

இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியமா..? மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

இதனையடுத்து, பெருகிவரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 2-வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுமா என்னும் கேள்வி எழுந்தது. இதனையடுத்து, மத்திய அரசு வட்டாரங்களில் நிலவி வந்த கருத்துக்கள் அடிப்படையில் இந்தியாவில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் 2-வது பூஸ்டர் டோஸ் தேவையில்லை. முதலில் முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதை நிறைவு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Chella

Next Post

பொங்கல் பண்டிகை..!! தமிழகம் முழுவதும் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

Tue Jan 3 , 2023
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12, 13, 14 ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் 6,300 பேருந்துகளுடன் கூடுதலாக 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். சென்னையை தவிர்த்து பிற ஊர்களில் இருந்து 3 நாட்களுக்கு […]

You May Like